தாம்பத்திய வாழ்வில் கணவனும் மனைவியும் உடல், உள்ளம் இரண்டாலும் இணைந்தால் தான் வாழ்க்கை வளமாகும். பிரம்ம வைவர்த்த புராணம் என்ன சொல்கிறது என்றால், சூரியன் உதயமாகும் நேரம், மறையும் நேரத்தில் தம்பதியர் உறவு கொள்ளக் கூடாது. இதனால் வறுமை ஏற்படுமாம். இதனால் நிம்மதியும் கெட்டுபோகும். அதுமட்டுமா நெருங்கி வரும் சிவராத்திரியில் உறவு கொள்வது குறித்தும் புராணங்கள் கூறுகின்றன.
மகாபாரதம் வானம் வெறுமையாக இருக்கும் அமாவாசை நாள்களில் தம்பதியினர் உறவு கொள்ளக் கூடாது என கூறுகிறது. அப்படி செய்யும் தம்பதிகள் மறுஜென்மத்தில் ஊர்வன இனத்தில் தான் பிறப்பெடுப்பார்களாம்.
துர்கை தேவிக்கு உகந்த நாளான நவராத்திரியின்போது விரதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும். அப்படி விரதத்தில் ஈடுபட்டிருக்கும்போது கணவனுடன் உறவில் ஈடுபடுவது பெரிய பாவத்தை வாங்கி தரும்.
மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உகந்த நாள். இந்த தினத்தில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் எல்லையில்லா புண்ணியம் கிடைக்கும். இந்த தினத்தில் உடலுறவில் ஈடுபடுவது சிவனின் கோபத்தை, சாபத்தை பெற வழிவகுக்கும் என கூறப்படுகிறது.