உஷார்: புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? அப்போ கண்டிப்பா இதை படியுங்க..!

First Published | Apr 25, 2023, 12:21 PM IST

உயர் இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் புகைபிடிப்பதுதான் என்கின்றனர் நிபுணர்கள். புகைப்பிடிப்பவர்களுக்கு அதிக பிபி பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து இங்கு காணலாம்...

புகைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் நல்லதல்ல. இதனால் பல கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. இது  கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை அவர்களால் தடுக்க முடியாது. ஏனெனில் விலகுவது நீங்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. இருப்பினும், இந்தப் பழக்கம் மனிதனைப் பல வழிகளில் பாதிக்கிறது. அதனால் கஷ்டமானாலும் கைவிடுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும். சிகரெட் பிடிப்பவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பதாக நிபுணர்கள் கூறுவது உங்களுக்குத் தெரியுமா? சிகரெட்டில் நிகோடின் உள்ளது. இதுவே உங்கள் இரத்த அழுத்த அளவை அதிகரிக்க காரணமாகிறது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. 
 

உயர் இரத்த அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு:

உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் விசை அதிகமாக இருக்கும்போது ஏற்படும். இது உங்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க காரணமாகிறது. இது இதய பிரச்சனைகள் தவிர வேறு பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், உயர் இரத்த அழுத்தத்திற்கு புகைபிடித்தல் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Tap to resize

உயர் இரத்த அழுத்தம்:

புகைபிடித்தல் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிகரெட்டில் உள்ள நிகோடின், வாசோபிரசின் மற்றும் அட்ரினலின் போன்ற அட்ரினெர்ஜிக் ஹார்மோன்களை வெளியிடுவதற்கு வழிவகுக்கிறது. இது உங்களுக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக செய்யும். இதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

உயர் ரத்த அழுத்த பிரச்சனை இல்லாத ஒருவர் தினமும் சிகரெட் பிடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும் என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் வீரியம் மிக்க உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கலாம். மேலும், சிறுநீரகங்களுக்கு ரத்த விநியோகம் குறைந்து, ரெனோ வாஸ்குலர் ஹைப்பர் டென்ஷன் பிரச்னையும் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புகைபிடித்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க அதிக ஹார்மோன்களை வெளியிடுகிறது. சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. ஆனால் புகைபிடிக்காத புகையிலை உங்கள் இரத்த அழுத்த அளவையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புகைபிடிப்பதை எப்படி கைவிடுவது?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால், ஆரம்பகால மரண அபாயத்தைத் தவிர்க்கலாம். மரணத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? புகையிலை பிடிப்பதினால், ஆறு வினாடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. 

இதையும் படிங்க: உடல் எடை குறைக்க நினைக்கிறீர்களா? அப்போ இதை குடிங்க..எடை தானாக குறையும்..!

புகைபிடிப்பதை தவிர்க்க சில குறிப்புகள்:

நிகோடின் மாற்று சிகிச்சை:

நிகோடின் மாற்று சிகிச்சை உங்களுக்கு பசியை சமாளிக்க உதவும். இதில் நிகோடின் கம், ஸ்ப்ரேக்கள், இன்ஹேலர்கள் போன்றவை உள்ளன. இவை புகைப்பழக்கத்தை கைவிட பெரிதும் உதவும். மேலும் உங்களுக்கு சிகரெட் பிடிக்கும் எண்ணம் தோன்றினால், அச்சமயத்தில் உங்களுக்குப் பிடித்த சமையல் செய்வது மற்றும் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் பேசுவது, இவை சிகரெட் ஆசையைத் உங்களுக்கு தவிர்க்க உதவும்.

Latest Videos

click me!