ice water: வெயிலில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கும் ஆளா நீங்கள்.. அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

First Published | Mar 31, 2023, 11:17 AM IST

கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணிக்க பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை அருந்துவோம். ஆனால் இந்தப் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பதை இங்கு காணலாம்.  

நாம் ஆரோக்கியமாக வாழ தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதுவும் கோடை காலத்தில் தொண்டைக்கு இதமாக ஐஸ் வாட்டர் தான் பலரின் தேர்வாக இருக்கும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கோடையில் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை இங்கு காணலாம்.  

ice water side effects tamil: தொண்டையில் பிரச்சனை 

வெயிலுக்கு இதமாக அடிக்கடி குளிர்ந்த நீரைக் குடிப்பதால் தொண்டை புண், மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிலும் சாப்பிட்டிற்கு பின், குளிர்ந்த நீரைக் குடிப்பது சுவாசக் குழாயில் அதிகப்படியான சளி உருவாவதற்கும், பல்வேறு அழற்சி நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். அதனால் முடிந்தவரை குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும். 

இதயத் துடிப்பு 

குளிர்ந்த நீர் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் குடிக்கும்போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுபடுத்தப்படுகிறது. இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. 

Tap to resize

செரிமான பிரச்சனை 

அதிகப்படியான குளிர்ந்த நீரை பருகினால் இரத்த நாளங்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். இது செரிமானத்தை தொந்தரவு செய்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைக் கட்டுப்படுத்துகிறது. சாப்பிட்ட பிறகு செரிமானத்தை கடினமாக்குகிறது. குளிர்ந்த நீரால் செரிமான அமைப்பு விரைவில் பாதிக்கப்படும். 

உடல் எடை கூடும் 

குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கச் செய்வதை கடினமாக்குகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும். 

பல் கூச்சம் 

குளிர்ந்த நீரைக் குடிப்பதால் பற்களின் உணர்திறன், மெல்லுவதில் சிரமம் அல்லது வேறு எந்த பானத்தையும் குடிப்பதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, சாதாரண அறை வெப்பநிலை தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும் 

பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். கோடையில் கூட சாதாரண நீரை குடிக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சில நோய்களைத் தவிர்க்கலாம். 

இதையும் படிங்க: கோடைகாலத்தில் வறுத்த உப்பு கடலை ஏன் சாப்பிடணும்?

தலைவலி, சைனஸ் வாய்ப்பு 

பிரிட்ஜில் உள்ள குளிர்ந்த நீரை குடித்த உடனேயே அது மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதை அடிக்கடி குடிப்பதால் மூளை உறைதல் பிரச்சனை ஏற்படும். குளிரூட்டப்பட்ட நீர் முதுகெலும்பு நரம்புகளை குளிர்விக்கிறது. இதனால் மூளை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி, சைனஸ் பிரச்சனை தோன்றும்.

உடல் கொழுப்பை அதிகரிக்கும் 

பிரிட்ஜில் வைத்து குடிக்கும் தண்ணீர், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கடினமாக்கி, தேவையற்ற கொழுப்பை உடைப்பதை சிக்கலாக்கும். இதனால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீர் குடிப்பது சிறந்தது. உணவுக்குப் பிறகு அல்லது உணவுக்கு முன் உடனடியாக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. கவனமாக இருங்கள். 

இதையும் படிங்க: ஏப்ரல் மாதத்தின் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த முழுவிவரம்.. !

Latest Videos

click me!