பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை பெரும்பாலும் பாஸ்மதி அரிசியில் தான் செய்வார்கள். பாஸ்மதியில் செய்யும் பிரியாணி காண்பதற்கும், சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாசனையில் மயங்கிவிடக் கூடாது. இப்போதெல்லாம் எல்லா உணவு பொருள்களிலும் கலப்படம் வந்துவிட்டது.
அண்மையில் தி சென்டர் பார் டிஎன்ஏ பிங்கர்பிரிண்ட் அண்ட் டைக்னோஸ்டிக்ஸ் (The centre for DNA Fingerprinting and diagnostics) செய்த ஆய்வில் சந்தைகளில் விற்கும் பாஸ்மதியில், 50 சதவீதம் போலியானது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 495 பிராண்ட் பாஸ்மதி அரிசி மாதிரிகளில் செய்யப்பட்டது. இந்த ஆய்வு 2021-22 இல் நடத்தப்பட்டது.
Image Credit: Getty Images
பாஸ்மதி அரிசி சமைப்பதற்கு முன்னும் பின்னும் அதன் நீளம், அகலத்தை தெளிவாக ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர். இந்த சோதனையில் பல மாதிரிகள் அந்த குறிப்பிட்ட அளவுகளில் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாஸ்மதியை அதிக விலைக்கு விற்க அதனுள் தரமற்ற அரிசியை கலந்துள்ளனர் விற்பனையாளர்கள். பாஸ்மதி அரிசியின் வாசனையை கொண்டு வரும் செடியின் சாறை அதன் மீது தெளித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் சோதனைக்கு பின் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கிட்னி பெயிலியர் ஆனவங்களுக்கு புது சிறுநீரகத்தை வைத்த பிறகு, அவங்க பழைய சிறுநீரகத்தை என்ன செய்வார்கள் தெரியுமா
அசல் பாஸ்மதி அரிசியின் அதிக விலை காரணமாக, பல விற்பனையாளர்கள் அதை மற்ற அரிசி வகைகளுடன் கலந்துவிடுகிறார்கள் என சிடிஎப்டியின் இயக்குனர் தங்கராஜ் சொல்கிறார். இதனால் தற்போது உள்நாட்டு சந்தையில் அரிசி மீது பெரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்களே இனி பாஸ்மதி அரிசி வாங்கும்போது கொஞ்சம் கவனமா இருங்கள். அசல் பாஸ்மதி அரிசியின் நீளம் மற்ற விவரங்கள்? இதோ..!