கோடைகாலத்தில் வறுத்த உப்பு கடலை ஏன் சாப்பிடணும்?

First Published | Mar 29, 2023, 2:02 PM IST

வறுத்த உப்பு கடலை வைத்து தயார் செய்யும் கோடைகால பானத்தின் நன்மைகளை இங்கு காணலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். 

இன்றைய காலத்தில் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மலச்சிக்கல் பிரச்சனையில் மக்கள் நீண்ட நேரம் கழிப்பறையில் அவதிப்படுகின்றனர். சிலர் மணிக்கணக்கில் கழிவறையில் இருந்தாலும் வயிறு சுத்தமாக மாறுவதில்லை. சிலருக்கு மலம் கழிப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு மந்திர பானத்தை குறித்து இன்று சொல்ல போகிறோம். கோடையில் இந்த பானத்தை குடிப்பதன் மூலம் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். 

உப்பு கடலையை மாவாக அரைத்து தயார் செய்யும் இந்த பானம் கோடைகாலத்துக்கான சஞ்சீவி என அழைக்கப்படுகிறது. இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் நச்சு நீக்கி பானமாகும். இது வயிற்றின் உள் அமைப்பை சுத்தப்படுத்தும். நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி, உடல் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது. இதனால் உடல் சூடு குறையும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பதால் கிடைக்கும் 3 பெரும் நன்மைகளும், செய்முறையும் இங்கு காணலாம். 

Latest Videos


நச்சுக்களை நீக்கும்..!

வறுத்த உப்பு கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமான குழாய்களை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவுகிறது. இது உடலின் நச்சுகளை சுத்தப்படுத்துகிறது. குடலில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. 

மூல வியாதி குணமாகும்..!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த சத்துணவு பானத்தை குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. மூல வியாதி இருப்பவர்கள் இதை குடித்தால் கட்டுப்படுத்தப்படும். ஏனெனில் இந்த பானத்தால் உடலில் ஈரப்பதம் தங்கியிருக்கும். 

நீரேற்றமாக வைக்கும்..!

கோடையில் இந்த பானத்தை குடிப்பதால் உடலில் உள்ள நீர் பற்றாக்குறை நீங்கும். உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்க உதவும். இந்த வெயில் காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் இந்த பானம் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க: சீதாப் பழத்தின் இனிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு கூட தீங்கு செய்யாது..கொட்டி கிடக்கும் சத்துக்கள் அப்படி..!

செய்முறை 

வறுத்த உப்பு கடலையை பொடித்து வைத்து கொள்ளுங்கள். இந்த பொடியை 2 ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து கொள்ளுங்கள். சுவைக்காக கருப்பட்டி அல்லது வெல்லத்தை பொடித்து போடலாம். சுவைக்காக கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம். இந்த அற்புத பானத்தை காலையில் குடித்தால் வயிற்று பிரச்சனைகள் தீரும். 

இதையும் படிங்க: முள்ளங்கியை எப்படி சாப்பிடணும் தெரியுமா? இந்த மாதிரி 1 தடவை சாப்பிடுங்க..! கேஸ், செரிமான பிரச்சனையே வராது.. 

click me!