tamil Health updates Seetha Palam or custard apple benefits: சீதாப்பழம் பார்க்க கரடு முரடாக இருந்தாலும், அதன் பலன்கள் ஏராளம். சீதாப் பழத்தை ஆங்கிலத்தில் Custard Apple என்பார்கள். இதை உண்பது எளிதான காரியம் அல்ல. கொஞ்சம் கடினம் தான். ஆனால் இதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதிலுள்ள இனிப்பு சுவையுடன், மற்ற பழங்கள் போட்டி போட முடியாது. அத்தனை தித்திப்பாக இருக்கும்.
வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்களுக்கு பஞ்சம் இல்லாமல் சீதாப்பழத்தில் கொட்டி கிடப்பதால் ஊட்டச்சத்துக்களின் புதையலாகக் கருதப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம் ஆகியவை சீதா பழத்தில் மிகுந்து காணப்படுகின்றன. இந்த பழம் நம்முடைய எலும்புகளை வலுவாக்கும். வீக்கம், மாதவிடாய் முன் நோய்க்குறி (pms) போன்ற நோய்களை குணமடைய செய்ய உதவும்.
நீரிழிவு நோய்
சீதா பழத்தின் சத்துக்கள் காரணமாக அதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்து கொள்வார்கள். ஆனால் நீரழிவு நோய் வந்தவர்கள் பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால் பருவகால பழங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென ஏற்றிவிடும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் பி6 சீதா பழத்தில் உள்ளது.
ரத்த அழுத்தம்
சீதாப் பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் சீதாப்பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
சீதா பழத்தின் நன்மைகள்
1) மன நலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
2) கண் பார்வை மேம்படுகிறது.
3) ரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்கும்
4) புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
5) அசிட்டிட்டிக்கு நல்லது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
6) அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
இந்த சீதா பழத்தை தினமும் எடுத்து கொள்வதால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும். தயங்காமல் எடுத்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: புதினா இலையை சும்மா நினைக்காதீங்க.. கொஞ்சம் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் இருக்கு!