Tamil health updates Mint leaves benefits: புதினா இலைகள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, நம்முடைய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன. புதினா எல்லா பருவங்களிலும் கிடைக்கும் அற்புத பொருள். இதனை வீட்டிலே வளர்க்க முடியும். வீட்டு தொட்டிகளில் புதினாவை வளர்க்கும்போது, தினமும் கூட பயன்படுத்த முடியும். இதிலுள்ள மருத்துவ பயன்பாடுகளை இங்கு காணலாம்.
புதினாவில் அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. ஒவ்வாமைக்கு நல்ல மருந்தாக பயன்படும். செரிமான கோளாறுகளுக்கு நல்லது. அசைவ உணவுக்கு பிறகு புதினா நீர் குடிக்க அதுவும் ஒரு காரணம்.
புதினா இலைகள் வயிற்று பிரச்சனைகளை சுகப்படுத்தும். வீக்கம், வாயு, மாதவிடாய் வலிக்கு கூட நிவாரணம் அளிக்கும். புதினா இலைகளை சாப்பிட்டால் பித்த சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் பித்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களின் முலைக்காம்பு விரிசலை சரி செய்கிறது. தாய்ப்பாலுடன் வரும் வலியைக் குறைக்கிறது. தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாய் துர்நாற்றத்தை முற்றிலும் நீக்குகிறது. குடல் எரிச்சல் நோயிலிருந்து விடுதலை அளிக்கிறது. குமட்டலைத் தடுக்கிறது.