Throat Pain: தொண்டை வலி.. விழுங்குவதில் சிரமமா? நிவாரணம் கிடைக்க இந்த 6 உணவுகளை செய்து சாப்பிடுங்க..!

First Published Mar 23, 2023, 12:08 PM IST

sore throat pain: தொண்டை வலியால் அவதியா? தொண்டை வலிக்கு இதமான 6 உணவுவகைகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

தொண்டை வலி அல்லது தொண்டை புண் இருக்கும்போது நாம் உணவை விழுங்க மிகவும் சிரமப்படுவோம். அதிலும் எச்சில் விழுங்க படாதபாடு பட்டு தவிப்போர் இங்கு ஏராளம். ஒரு சொட்டு தண்ணீரை விழுங்குவதும் கடினம் தான். சிலருக்கு தொண்டை புண் ஏதேனும் கிருமி தொற்றால் ஏற்படலாம். சிலருக்கு குளிர்பானங்கள், உணவுகள் மூலம் வரலாம். தொண்டை வலியின் நிவாரணத்திற்காக மருத்துவ உதவியை அணுகும் முன் வீட்டு வைத்தியம் முயன்று பார்க்கலாம். தொண்டை வலியோ, தொண்டை புண்ணோ இருந்தால் வெந்நீர் மட்டுமே அருந்துங்கள். 

தொண்டைக்கு இதம் அளிக்க பாலில் மஞ்சள், மிளகு தூள், பனங்கற்கண்டு ஆகியவை கலந்து குடிக்கலாம். இது வறட்டு இருமலால் புண்ணான தொண்டைக்கு நல்ல மருந்து. தொண்டை வலியிலிருந்து விடுபட சில உணவுகள் இருக்கின்றன. உங்களுக்கு தொண்டை சார்ந்த வலி வரும்போது இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். 

இஞ்சி, தேன் கலந்த தேநீர் 
இஞ்சி, தேன் இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. அவை தொண்டை வலியை குணப்படுத்த உதவும். தொண்டை வலிக்கு நிவாரணம் பெற வெந்நீரில் இந்த பொருள்களை கலந்து அருந்தலாம். இஞ்சியுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்துவதால் தொண்டைக்கு நிவாரணம் கிடைக்கும். 

உருளைக்கிழங்கு மசியல் 
வேகவைத்த உருளைக்கிழங்கு உங்கள் நாவின் சுவை மொட்டுகளை திருப்தியாக்கும். இதை உண்ணும்போது தொண்டை வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அவை விழுங்குவதற்கு ரொம்ப எளிது. கொஞ்சம் உப்பு, வெண்ணெய் ஆகியவை சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு உண்பது தொண்டை வலி இருப்பவர்களுக்கு நல்லது. 

சிக்கன் சூப்
சிக்கன் சூப் அல்லது வெஜிடபிள் சூப் செய்து குடிக்கும்போது தொண்டை வலிக்கு இதமாக இருக்கும். இந்த சூப் வகைகள் உடலுக்கு ஊட்டம் தருவதோடு தொண்டை வலியிலிருந்து விடுபடவும் உதவுகிறது. உடலும் நீரேற்றமாக இருக்கும். 

கிச்சடி

உங்களுக்கு வயிற்றில் அல்லது தொண்டையில் பிரச்சனை வந்தால் யோசிக்காமல் அன்றைய உணவை கிச்சடியாக மாற்றி கொள்ளுங்கள். அரிசி அல்லது ரவையில், காய்கறிகள் சேர்த்து சமைக்கும் இந்த உணவு எளிதில் செரிமானமாகும். ஊட்டசத்து அதிகமாக உள்ளது. தொண்டை வலி இருக்கும் போது இந்த எளிமையான உணவை எடுத்து கொள்ளலாம். 

 பருப்பு 

புரதம் அதிகம் கொண்ட உணவு. இதை எளிதில் ஜீரணிக்கலாம். எந்த பருப்பாக இருந்தாலும் கொஞ்சம் தண்ணீர் கலந்து சமைக்கவும். ஊட்டம் கிடைப்பதோடு உடலும் வலுப்பெறும். 

இதையும் படிங்க: கல்லீரல் கொழுப்பு பிரச்னை கூட சரியா போகும்.. காலையில் இந்த 2 ஜூஸ் குடித்து பாருங்க..நம்ப முடியாத நன்மை இருக்கு

காய்கறிகள் 

தொண்டை வலி குணமாகவில்லை எனில், காய்கறிகளை எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் பருப்பு போட்டு கொண்டால் சுவை அதிகரிக்கும். அதனுடன் வெங்காயம், கேரட், பட்டாணி ஆகிய காய்கறிகளைச் சேர்த்து சூடாகச் சாப்பிடலாம். இது தொண்டை வலியை போக்க உதவும் மற்றும் சாப்பிடுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படிங்க: சொந்த வீடு, கார் வாங்க நினைத்து காரியம் தடைபடுதா? விதியை மாற்றி ராஜயோகம் தரும் எளிய பரிகாரம்..!

click me!