பொடுகு ஏற்படக் காரணம் :
தலை சருமத்தில் சில சிறிய கட்டிகளை, பொடுகு செதில்களால் முற்றிலும் மூடப்பட்டிருக்கும். இது பொதுவாக எண்ணெய் சுரப்பிகள் அதிகமுள்ள பகுதிகளையே அனேகமாக பாதிக்கிறது.
சீகற்காய் அல்லது ஷாம்புவினை போதுமான அளவில் பயன்படுத்தமை , தலை மற்றும் கூந்தலை சரியாக தண்ணீரில் அலசாமல் இருத்தல் போன்றவையே இறந்த மற்றும் எண்ணெய் செல்கள் உருவாகிறது. அதுவே பொடுகு ஏற்பட முக்கிய காரணமாகும்.
இப்போது நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து எவ்வாறு பொடுகினை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்:
பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் தேங்காய் எண்ணெய் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது சருமத்தில் செதில் செதிலாக உதிரும் பொடுகை சிறப்பாக கட்டுப்படுத்த பயன்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது:
உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையில் ஷாம்பூ போட்டு அலசி விட வேண்டும். இதனை நீங்கள் வாரத்தில் 2 முறை செய்து வர சில மாதங்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.