கோடைக்காலம் ஆரம்பித்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இம்மாதிரியான நேரத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு வருபவர்களுக்கு உடல் மிக அலுப்பாக தோன்றும். தவிர வெயில் நேரங்களில் பலமுறை அனைவருக்கும் உடலில் நீர் சத்து குறைபாடும் உண்டதாகும். இதனால் பலருக்கும் காய்ச்சல் போன்றவையும் உண்டாகும்.
இதனை சரி செய்ய அடிக்கடி தண்ணீர் குடித்து வருவதன் மூலம் இம்மாதிரியான குறைபாடுகளை சரி செய்ய இயலும். ஆனால் வெறும் தண்ணீரை அடிக்கடி சிலர் தயங்குவார்கள். எனில் தண்ணீரை தவிர்த்து பல்வேறு ஆரோக்கியமான பானங்களை நாம் நமது வீட்டிலேயே சுலமபாக செய்து குடித்து நீர் சத்து, உடல் சூட்டினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை அண்ட விடாமல் செய்யலாம்.
அந்த வகையில் வீட்டிலேயே சில பானங்களை பாரம்பரிய முறையில் சுத்தமாகவும், சுவையாகவும் செய்து குடித்து உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பேருதவியாக இருக்கும். என்னென்னெ பானங்கள் !எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!
புதினா லெமன் ஜூஸ்:
எலுமிச்சை பழம் – 1
புதினா – 15
சர்க்கரை – 2 ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸி ஜாரில் 1/2 கைப்பிடி புதினா இலைகளை சேர்த்துக் கொண்டு பின் அதில் இஞ்சியை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்த்து பின் எலுமிச்சை பழகி சாறை ஊற்றி சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும் .
அரைத்த பின் அதனை ஒரு பெய்லி வடிகட்டி 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறலாம்.
ரோஸ் மில்க் :
பால் – ½ லிட்டர்
சர்க்கரை – 50 கிராம்
ரோஸ் சிரப் – 3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் 1/2 லிட்டர் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்த்துக் கொண்டு ஆற வைத்து அதனை ஃப்ரிட்ஜில் சுமார் 2 மணி நேரம் வைக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு பிறகு அதனை ஒரு பௌலில் சேர்த்து அதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து கலந்து விட்டு, அடுத்தாக அதில் ரோஸ் சிரப் சேர்த்து மிக்ஸ் செய்து சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில் ஜில்லென பரிமாறலாம்.
இப்படி பாலக் மட்டன் தொக்கு செய்து கொடுத்தால் பத்தவே பத்தாது!
லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்:
புளிப்பில்லாத தயிர் – 1 கப்
ஏலக்காய்த்தூள் -1/2 ஸ்பூன்
பொடித்த சர்க்கரை – ¼ கப்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்த்து அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்து ஒரு க்ளாசில் சேர்த்துக் கொண்டு அதில் சில ஐஸ் கட்டிகள் சேர்த்து அதன் மேல் சிறிது துருவிய பாதாம் சேர்த்து சில்லென்று பரிமாறலாம்.
கிர்ணி பழச்சாறு:
கிர்ணி பழம் – 1
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை:
கிர்ணிப் பழத்தினுடைய தோல் மற்றும் விதைகளை எடுத்து விட்டு அதனை ஒரே மாதிரியான அளவில் வெட்டி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தென் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதனை ஒரு க்ளாசில் ஊற்றிய பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறலாம்.