குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய "வல்லாரை சட்னி"செய்து கொடுங்க!

First Published | Mar 13, 2023, 7:37 PM IST

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லாரை கீரை வைத்து சுவையான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

இன்றைய குழந்தைகள் காய்கறிகள்,கீரை வகைகளை அதிக அளவில் போதுமான அளவில் சாப்பிடுவதில்லை. அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் வாந்தி தான் எடுக்கிறார்கள். இப்படி சாப்பிட மறுக்கும், அடம்பிடிக்கும் பிள்ளை செல்வங்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் கீரைகளை சாப்பிட வைக்கும் விதமாக சட்னி செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.

அந்த வகையில் இன்று நாம் கீரை வைத்து சத்தான ஒரு சட்னி ரெசிபியை செய்ய உள்ளோம். கீரையில் பல விதங்கள் உள்ளன..ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு சத்தினையும் , பல நன்மைகளையும் நமக்கு அள்ளித்தரும்.

அந்த வகையில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லாரை கீரை வைத்து சுவையான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தவிர வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை திறம்பட செய்கிறது. அதோடு இது உடலில் உண்டாகும் புண்களை ஆற்றும் ஆற்றல் கொண்டது.


 

மேலும் தொண்டைக்கட்டு,சளி மற்றும் காய்ச்சல் குறைக்கும் தன்மை கொண்டது. அதோடு சொறி, படை,சிரங்கு போன்ற சரும நோய்களையும், உடற்சோர்வு மற்றும் பல் சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை-1 கட்டு
உளுந்தம் பருப்பு- 2 ஸ்பூன்
மிளகாய்- 3
புளி - சிறிது
வெல்லம் -சிறிது
மிளகு- 1/2 ஸ்பூன்
கடுகு-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு


வெயிட் லாஸிற்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் ப்ரக்கோலி காபி ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

செய்முறை:

முதலில் வல்லாரை கீரையை அழ;அலசி வைத்து அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் அதில் அரிந்து வைத்துள்ள வல்லாரை கீரையை சேர்த்து வதக்கி விட்டு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Tap to resize

பின் அதே கடாயில் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து கலவையை மிக்சி ஜாரில் சேர்த்து அதோடு வதக்கிய கீரை,வெல்லம் , புளி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, 1 வர மிளகாய் , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை சட்னியில் சேர்த்தால் சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி!

 

இந்த சட்னியை இட்லி,தோசைக்கு, சப்பாத்தி போன்றவைக்கு தொட்டுக்க கொண்டு சாப்பிடலாம். மேலும் வெரைட்டி ரைஸ்க்கும் தொட்டு வைத்து சாப்பிடலாம்.

Latest Videos

click me!