நாம் அன்றாடம் செய்து சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு பருப்பும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளது. அந்த வகையில் இன்று நாம் பாசிப்பருப்பு வைத்து சூப்பரான ஒரு ரெசிபியை செய்ய உள்ளோம்.
புரதச்சத்து நிறைந்து காணப்படும் பாசிப்பருப்பு வைத்து சாம்பார், கூட்டு,பாயாசம் ஆகியவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பாசிப்பருப்பு வைத்து அட்டகாசமான ரொட்டி செய்ய உள்ளோம். வழக்கமாக ரொட்டியை கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து தான் செய்வோம்.
புரதச்சத்து நிறைந்து காணப்படும் பாசிப்பருப்பு வைத்து இன்று கொஞ்சம் வித்தியாசமாக சூப்பரான சுவையில் பாசிப்பருப்பு வைத்து சில மசாலா சேர்த்து அருமையான ரொட்டியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்ற ஒரு ஆரோக்கிய உணவாகும். நீங்களும் இதனை வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு
வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நீரில் ஒரு முறை கழுவி சுத்தம் செய்து பின் அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்து அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் போட்டு தீயினை சிம்மில் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.
குக்கரின் முழு பிரஷர் அடங்கிய பின் தண்ணீரை வடிகட்டி பாசிப்பருப்பை எடுத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மல்லித்தழையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு விலாசமான பாத்திரத்தில் அல்லது கடாயில் கோதுமை மாவு சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவினை ஒரே மாதிரியான அளவில் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு தட்டையாக தட்டி அதன் நடுவே இந்த ரெடி செய்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சிறிது வைத்து மாவை மடித்து மீண்டும் அதை தட்டையாக கவனமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு தவாவை வைத்து, தவா சூடான பின் தேய்த்து வைத்துள்ள ரொட்டி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வெந்த பிறகு, எடுத்து விட வேண்டும். அவ்ளோதான் சுவையான மற்றும் சத்தான பாசிப்பருப்பு ரொட்டி ரெடி!