கோடை காலங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எல்லோரும் பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். தர்பூசணி பழம், நுங்கு, இளநீர், தேங்காய் பூ போன்ற பல உணவுப் பொருள்கள் கோடை காலத்தில் நம் உடலில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் சென்று வீடு திரும்பிய பின்னர் சிலர் குளிர்ந்த பிரிட்ஜ் வாட்டர் குடிப்பார்கள். ஆனால் அது தவறு.