கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. கருப்பட்டியை சாப்பிட்டால் நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால் தான் கருப்பட்டியை ஒரு துண்டு சாப்பிட்டால் கூட உடலுக்கு நல்லது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
சீரகம் அல்லது சோம்பு சேர்த்த நீரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். கோடைகாலத்தில் இப்படி குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். உடல் சூட்டினால் வரும் நோய்கள் உங்களை அண்டாது.
பால் சூடானதும் அதை டம்ளரில் ஊற்றி பனங்கற்கண்டு, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து குடித்தால் தொண்டைப்புண் சரியாகும். சிலருக்கு மூலநோய் அவஸ்தை இருக்கும். அவர்கள் இதனை பின்பற்றலாம். கருப்பட்டிக்கு வயிற்று புண்களை ஆற்றும் சக்தி உண்டு.
நாம் உபயோகம் செய்யும் வெள்ளை சர்க்கரை உட்கிரக்கப்படுவதற்காக உடலில் இருக்கும் சில வைட்டமின்களை கூட எடுத்து கொள்ளும். அதாவது நம்முடைய சத்துக்களை உறிஞ்சி விடுகிறது. அதனால் அதனை வைட்டமின் திருடன் என்பார்கள். ஆனால் கருப்பட்டி அப்படியல்ல. எல்லா நன்மைகளும் கொண்டிருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டியை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் வறுத்த உப்பு கடலை ஏன் சாப்பிடணும்?