Winter Dehydration : தாகம் எடுக்கலனு குளிர்க்காலத்துல தண்ணீர் குடிக்காம இருக்கீங்களா? உடல்ல இந்த பிரச்சினைகள் தலைதூக்கும்!!

Published : Nov 13, 2025, 12:09 PM IST

குளிர்காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்று தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ அல்லது குறைவாக குடித்தாலோ உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Winter Dehydration

குளிர்காலம் வந்தாச்சு. வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் தாகம் எடுக்காது. இதனால் சிலர் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள். இன்னும் சிலரோ தாகம் எடுக்கவில்லையே பிறகு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அப்படியே இருந்து விடுவார்கள்.

ஆனால், குளிர்காலத்தில் கண்டிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டும். அதைவிட குறைவாக குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதாவது சிறுநீரகம், இதயம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த பதிவில் குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

27
தலைவலி மற்றும் சோர்வு :

குளிர்காலத்தில் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லை என்றால் தலைவலி அதிகரிக்கும் மற்றும் உடல் எப்போதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். எனவே, குளிர்காலத்தில் தாகம் எடுக்க விட்டாலும் உங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் அப்படியே இருக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

37
செரிமான பிரச்சனை :

குளிர்காலத்தில் தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்ய முடியாமல் போகும் இதனால் சாப்பிட்ட உணவானது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். குறைவாக தண்ணீர் குடித்தால் உடலில் இருந்தும் கழிவுகள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். மேலும் கழிவுகள் குவிந்திருந்தாலும் பிற உடல் உறுப்புகள் பாதிப்படையும்.

47
சிறுநீரக பிரச்சனை :

குளிர்காலத்தில் குறைவாக தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதாவது சிறுநீரகங்களில் இருக்கும் கழிவுகள் பிரித்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளன. எனவே சிறுநீரக நன்றாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

57
இதயம் பாதிக்கப்படும் :

குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையானது பாதிக்கப்படும். இதனால் இதய செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடக்காது. இதனால் இதயத்தில் அழுத்தம் அதிகரித்து, பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

67
மூட்டு மற்றும் தசை வலி :

குளிர்காலத்தில் குறைந்த அளவில் தண்ணீர் குடித்தாலோ அல்லது தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ உடலில் போதுமான அளவு எலக்ட்ரோலைட்டுகள் இருக்காது. இதன் விளைவாக மூட்டு வலி அதிகரிக்கும். குறிப்பாக ஏற்கனவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு வலி மேலும் அதிகமாகும். மேலும் நீரிழப்பு காரணமாக தசைவலி ஏற்பட்டு, எலும்பு பாதிக்கப்படும்.

77
சரும பிரச்சனைகள் :

குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சரும வறட்சியடைந்து, சருமம் எப்போதுமே மந்தமாக காணப்படும். மேலும் பல சரும பிரச்சனைகளும் ஏற்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories