கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தை ஒதுக்கக் கூடாது.. அந்த பழம் 1 சாப்பிட்டால்.. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.!

First Published | Mar 25, 2023, 4:40 PM IST

நன்கு பழுத்து தோலில் கருப்பு அல்லது பழுப்பு நிற மாற்றம் அடைந்த வாழைப்பழங்களில் தான் சத்துக்கள் கொட்டி கிடைக்கின்றன. 

வாழைப்பழங்கள் மற்ற பழங்களை விட மலிவான விலையில் கிடைக்கும். ஆனால் அது அதிகமாக பழுத்து கருப்பு அல்லது பழுப்பு புள்ளிகளுடன் மாறினால் பலர் அதை உண்ணாமல் தூக்கி எறிகின்றனர். வாழைப்பழம் அதிகமாக பழுக்கும் சமயங்களில் தான் அதனுடைய சத்துக்கள் இரட்டிப்பாக கிடைக்கின்றன. அந்த பழங்கள் நம் உடலுக்கு செய்யும் அதிசயங்களை தெரிந்து கொண்டால், இனிமேல் அதிகம் படுத்த வாழைப்பழங்களை தூக்கி எறியவே மாட்டீர்கள். 

வாழைப்பழம் நன்கு பழுக்கும்போது அதில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் வாழைப்பழத்தின் தோலில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். இது என்சைம்களால் நிகழ்கிறது. வாழைப்பழம் பழுக்க பழுக்கத்தான் அதன் இனிப்பு சுவை அதிகமாகும்.  ரொம்ப பழுத்த வாழைப்பழங்களில் தான் அதிகமாக டிரிப்டோபான் இருக்கிறது. இதனால் நம்முடைய மன அழுத்தமும் பதற்றமும் குறைகிறது. நன்கு பழுத்த வாழைப்பழங்கள் நமக்கு செய்யும் மொத்த நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். 

Tap to resize

மாரடைப்பால் தான் நெஞ்சு வலி ஏற்படும் என்ற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. இது தவறு. நெஞ்சு வலியின் அறிகுறிகள் பல காரணங்களால் வருகிறது. பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டால் நெஞ்சுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு அசிட்டிட்டியால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அவர்கள் வாழைப்பழத்தை உண்டால் குணமாகும். அமிலத்தன்மையை குறைக்கும். 

 ரொம்ப பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால், பழுத்த வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ராலைக் கூட கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இருதய நோய்களின் அபாயம் குறையும். 

இதையும் படிங்க: தினமும் இந்த 7 காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சீராகும் நோய்கள்... ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கேரண்டி..!
 

உங்களுக்கு தசைவலி பிரச்சனை இருந்தால், நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வலியிலிருந்து நிவாரணம் பெற அவற்றைப் பயன்படுத்தலாம். பழுத்த வாழைப்பழங்கள் மலமிளக்கியாகவும் செயல்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் உண்ணலாம். ஆனால் வாழைப்பழமும் பாலும் எடையை கூட்டி விடும் என்பதால் எடை குறைப்பு செய்பவர்கள் கவனமாக எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் உண்ணலாம். 

இதையும் படிங்க: தூங்கும் பொழுது இடது பக்கமா தான் சாய்ந்து படுக்கனுமா? உண்மையான காரணம் தெரிந்தால் இப்படி தான் தூங்குவீங்க..!

Latest Videos

click me!