தூக்கமின்மை பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீரிழிவு, தைராய்டு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தூக்கம். நல்ல தூக்கம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. மனநிலையை காக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தவும் தூக்கம் மிகவும் அவசியமானது.
பலருக்கு போதுமான தூக்கம் கிடைப்பது கடினம் என்றாலும், ஒரு இரவில் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது அவசியம். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்னை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சூப்பர்ஃபுட்களை முயற்சித்திப் பாருங்கள. அவை உங்களை தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுவிக்கும்.