அன்றாடம் விற்பனையில் காணப்படும் சக்கரவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு வேர் காய்கறி ஆகும். அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆரஞ்சு மற்றும் ஊதா நிற சக்கரவள்ளிக் கிழங்கில் ஆண்டிஆக்சிடண்டுகள் கிடைப்பதற்கான வளமான மூலமாகும். இது புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. சக்கரவள்ளிக் கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
மேலும், இதில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குடல் ஆரோக்கியம் பெற உதவுகிறது. ஒரு நாளைக்கு 20-33 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவு பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.