கொத்தமல்லியை போலவே அதன் விதைகள் பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஆகிய பல சத்துக்களும் இதில் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக இந்த விதைகளை வைத்து தயார் செய்யும் கஷாயம் இருமலையும், சளியையும் விரட்டிவிடும்.
காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் தான் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. காலையில் காபி, தேநீருக்கு பதிலாக இந்த கஷாயத்தை செய்து பரிமாறவும். இந்த மூலிகை தேநீர் இருமலை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த கசாயத்தை சில பொருள்களை கொண்டு தயார் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
* கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
* கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
* சுக்கு - 2 துண்டு
* பனை வெல்லம் - 1 கைப்பிடி
* 3 கப் தண்ணீர்
செய்முறை
அனைத்து பொருட்களையும் பொடியாக உடைத்து கொள்ளுங்கள். 3 கப் தண்ணீர், 1 1/2 கப் வரும் வரை எல்லா பொருட்களையும் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இப்படி சுண்டக் காய்ச்சி வடிகட்டி அருந்தினால் மிளகின் காட்டம் தொண்டையில் உணரமுடியும். இது தொண்டை வலியை போக்க உதவுகிறது.
கொத்தமல்லி விதைகளையும், பெருஞ்சீரக விதைகளையும் நீரில் ஊறப் போட்டு, காலை எழுந்ததும் அந்த நீரால் கண்களை நன்கு கழுவுங்கள். இதனால் கண்கள் நலம் பெறும். கொத்தமல்லி விதைகளை ஊறவைத்த நீரை காலையில் குடித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். வாரம் இருமுறை அருந்தலாம். மாதவிடாய் வலிக்கு ஏற்றது. அதுமட்டுமா? கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த தண்ணீர் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் இருக்குமாம்.
இதையும் படிங்க: உங்க பிட்டத்தை அழகாவும், பெரிதாகவும் மாற்றும் உணவுகள் பற்றி தெரியுமா?