செக்ஸ் இல்ல வேற... ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்!!

First Published | Mar 23, 2023, 6:30 PM IST

உடலுறவுக்கு முன் ஆண்கள் செய்ய விரும்பும் 5 விஷயங்கள், இதை செய்தால் எந்த பெண்ணும் மயங்கி விடுவாளாம்.  

பெண்களுக்கு இன்பமான உடலுறவு வைத்து கொள்ளும் முன் முன்விளையாட்டு முக்கியமானது. உடலுறவுக்கு முன்பாக உற்சாகமாக உணர பெண்கள் சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். பெண்ணை மகிழ்விக்க முன்விளையாட்டு (போர்பிளே) சிறந்த தூண்டுதலாக செயல்படுகிறது. ஆனாலும் வேறுசில விஷயங்களை பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இந்த பதிவில் காணலாம். 

உணர்வே.. உயிரே..!

உடல் நெருக்கத்தைப் போலவே உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தையும் பெண்கள் விரும்புகிறார்கள். அதனால் போர்பிளேவுக்கு முன் உங்கள் துணையுடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைய நேரம் ஒதுக்குவது மிகவும் அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் அந்த உறவை மாற்றும். எடுத்தவுடனே உங்கள் துணை மேல் பாய நினைக்காமல், உரையாடல்களில் ஈடுபட முயற்சிக்கவும். இது ஆழமான உணர்ச்சித் தொடர்பை உருவாக்க உதவும். 

Tap to resize

மெல்ல தொட்டுப் பார்!! 

நெருக்கத்தை அதிகரிக்க தொடுதல் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். போர்பிளே செய்யும் முன், பெண்கள் தங்கள் துணையை அரவணைக்க அல்லது கைகளைப் பிடிப்பதை விரும்புவார்கள். உங்கள் துணையின் தலைமுடி, முதுகு அல்லது கைகளை மெதுவாகத் தடவி கொடுப்பது நெருக்க உணர்வை அதிகரிக்கும். அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பை வளர்க்கவும் உதவும்.

உடலை அறியுங்கள்..! 

எப்போதும் உடலுறவுக்கு முன் உங்களுடைய துணையை முத்தமிடுங்கள். மென்மையான முத்தம், பாசமான வார்த்தைகள், கொஞ்சம் மசாஜ் மூலம் உங்களுடைய துணையின் உடலை தொட்டு ஆராய நேரம் ஒதுக்கங்கள். இது அவர்களை நிதானமாகவும், வசதியாகவும் உணரச் செய்யும். 

காதல் சைகைகள் 

போர்பிளேவுக்கு மனநிலையை கொண்டு செல்ல நறுமண மெழுகுவர்த்திகள், மென்மையான இசை உதவும். இவை உங்கள் மனநிலையை மிகவும் இன்பமாக வைக்கிறது. உங்கள் துணையின் விருப்பமான பானம் அல்லது சிற்றுண்டியைக் கொண்டுவந்து மேசையில் வைத்தால், அவர்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். சிறிய விஷயங்கள் தான்.. ஆனால் தங்கள் தேவைகள் கவனிக்கப்படுவதை பெண்கள் விரும்புவார்கள். முயன்று பாருங்களேன். உங்கள் துணையின் உடல் அசைவுகள் மீது கவனம் செலுத்துவது, அவரது தேவைகளை புரிந்து பதிலளிப்பது உங்களுக்குள் நல்ல நெருக்கத்தை உண்டாக்கும்.  

இதையும் படிங்க: ஆணுறுப்பு வளர்ச்சி இந்த வயதில் நின்றுவிடும்... அப்போ அதன் பிறகு செய்யும் முயற்சிகள் வேஸ்ட் தானா?

சின்ன சின்ன ஆசை... திக்கி திக்கி பேச... 

போர்பிளேவுக்கு முன், உங்கள் துணையிடம் அவரது ஆசைகள், விருப்பங்கள் பற்றி பேச நேரம் ஒதுக்க வேண்டும். அவளுக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்கவில்லை என்று கேளுங்கள். உங்கள் துணையின் பதில்களைக் கேளுங்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே மகிழ்ச்சியான, திருப்தியான அனுபவத்தை மேம்படுத்தும். நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: பெண்கள் சுயஇன்பம் பண்றப்போ.. இப்படியெல்லாம் யோசிப்பாங்களாம் தெரியுமா?

Latest Videos

click me!