ஹார்மோன் சீராக இல்லாமல் இருக்கும்போது கின்கோமாஸ்டியா ஏற்படுகிறது. சில பதின்பருவ ஆண்களுக்கும், வயதான ஆண்களுக்கும் மார்பகங்கள் இப்படி மாறுகின்றன. சிலர் அப்படியே வாழ பழகிவிட்டனர். ஆனால் சிலர் இதை விரும்புவதில்லை. கின்கோமாஸ்டியா ஏற்பட என்ன காரணம் என்று தெரியுமா? ஆண்களின் ஹார்மோன் சமநிலையின்மை தான் அதற்கு முதன்மை காரணம். ஆண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் அளவுகள் சமமாக இல்லாமல் இருக்கும்போதுதான், அவர்களின் மார்பகம் விரிவாக மாறுகிறது.
அதுமட்டுமில்லை, சில மருந்துகளும் மார்பக திசுக்களில் வீக்கத்தை உண்டாக்கும். இந்த காரணத்தால் அவை கனமாகவும், பெரிதாகவும் மாறிவிடுகிறது. இந்த மாதிரியான வீக்கம் நாளடைவில் மாறிவிடும். அப்படி மாறாவிட்டால் மருத்துவரை அணுகலாம். பெரும்பாலும் உடல் பருமன் அதிகரிக்கும் ஆண்களுக்கு தொப்பையை போலவே மார்பகங்களும் வளர்ந்து தொங்குவதை பார்த்திருப்பீர்கள். இப்படி ஆண்களின் மார்பகங்கள் பெரிதாகி காணப்படுவதற்கு காரணங்கள் பின்வருமாறு:
1. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
2. விரை விதை புற்றுநோய் இருப்பவர்கள்
3. தைராய்டு உள்ளவர்கள்
4. குடிப்பழக்கம்
5. உடல் எடை அதிகம் உள்ளவர்கள்
6. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றில் நோய்
7. நுரையீரல் பாதிப்பு
8. நுரையீரல் புற்றுநோய்
9. சில வீரியமான மருந்துகள்
சிகிச்சை
உடல் பருமன் அதிகரித்ததால் மார்பகங்கள் பெரிதாக இருக்கும் பட்சத்தில் முறையான உடற்பயிற்சிகள் மூலம் அதனை சரி செய்ய முடியும். பருவ வயது ஆண்களுக்கு பெரிய மார்பகங்கள் வந்தால் அதற்கு சிகிச்சை தேவையில்லை. இது மாறிவிடும். ஆனாலும் வெகு காலத்திற்கு பின்னும் மாற்றம் இல்லையெனில் சிகிச்சை தேவை. ஹார்மோன் சீராக சுரக்காமல் கின்கோமாஸ்டியா பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: பெண்கள் சுயஇன்பம் பண்றப்போ.. இப்படியெல்லாம் யோசிப்பாங்களாம் தெரியுமா?
மருத்துவரின் அறிவுரைகளின்படி, மருந்துகள், அறுவை சிகிச்சை ஆகிய இரண்டும் மார்பகங்களை பழைய நிலைமைக்கு மாற்றும். லிபோசக்ஷன் என்ற அறுவை சிகிச்சை முறையில் மார்பகங்களில் உள்ள கூடுதல் கொழுப்பு அகற்றப்படும். இதன் மூலம் மார்பகம் தளர்வுகளின்றி தட்டையான நிலைக்கு மாறும்.
இதையும் படிங்க: செக்ஸ் இல்ல வேற... ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்!!