Men’s Health: ஆண்களே!! உங்க ஆரோக்கியத்தை இப்படி 'செக்' பண்ணுங்க! இந்த '3' அறிகுறிகள் தான் டேஞ்சர்

Published : Nov 19, 2025, 03:03 PM IST

ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்க கூடாத சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
Symptoms Men Should Not Ignore

பொதுவாக பெண்களை விட ஆண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை சற்று குறைவாகவே இருக்கும். பெரும்பாலான ஆண்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக தான் மருத்துவரை சந்திப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்களது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இயற்கை வழியில் தான் தீர்வு காண விரும்புவார்கள். ஆனால் எல்லா பிரச்சனைகளையும் மருத்துவரிடம் செல்லாமல் இயற்கை வழியில் சரி செய்து விட முடியாது.

இத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் தங்களது உடலில் தோன்றும் சில அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. இல்லையெனில் பெரிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அது என்னென்ன அறிகுறிகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

26
செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ;

நீங்கள் சரியாக சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் அது செரிமான பிரச்சனையின் அறிகுறி என்று நீங்கள் நினைப்பது தவறு. ஏனெனில் சில சமயங்களில் அது வயிற்றுப் புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே வயிறு வலி, வயிறு உப்புசம், மலத்தில் ரத்தம், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் நீண்ட நாள் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

36
அடிக்கடி நெஞ்செரிச்சல் :

அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதை ஒருபோதும் உதாசீனப்படுத்தாதீர்கள். ஏனெனில் அது அலர்ஜி முதல் அல்சர் வரை என எல்லா பிரச்சினைக்கும் முதன்மையான அறிகுறியாகும். இதை மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுமுறை மூலம் சரி செய்யலாம்.

46
அதிகமாக தாகம் எடுத்தல் :

உங்களுக்கு எப்போதும் அதிகமாக தாகம் எடுத்துக் கொண்டே இருந்தால் அது சர்க்கரை நோய்கான அறிகுறியாக இருக்கும். எனவே உங்களுக்கு அது எப்போதுமே அதிகமாக தாகம் எடுத்தால் உடனே மருத்துவரிடம் சென்று சர்க்கரை நோய் காண பரிசோதனை எடுத்துக் கொள்ளவும்.

56
அதிகப்படியான சோர்வு :

அடிக்கடி அதீத சோர்வை உணர்கிறீர்கள் என்றால் அதை அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது தூக்கமின்மை, நுரையீரல், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை, ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் அடிக்கடி அதிகமாக சோர்வாக உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

66
நெஞ்சு வலித்தல் :

நுரையீரல், குடல் மற்றும் இதய பிரச்சனையின் முதல் அறிகுறி இதுவாகும். மேலும் நெஞ்சு வலியுடன் மூச்சுத் திணறல் போன்றவையும் வந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

Read more Photos on
click me!

Recommended Stories