பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சிதான் எல்லோர் மனதில் தோன்றும் முதல் எண்ணமாக இருக்கும். ஆனால் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி 20% மட்டுமே உதவுகிறது. மீதமுள்ள 80% பலன்கள் உணவுப் பழக்கம் தான். நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொள்ளும்போது தான் எடை குறையும். இதற்கு சிறந்த வழி கொள்ளு தண்ணீர். இந்த தண்ணீர் எடை குறைய வெகுவாக உதவுகிறது. கொள்ளு தண்ணீரில் (Horse Gram Water) பல நன்மைகள் உள்ளன.
27
எடை குறைய!
கொள்ளுவில் குறைந்த கலோரிகள் தான் உள்ளன. ஆனால் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். பசி குறையும். அதிகம் சாப்பிடுவதை குறைக்கலாம். தொடர்ந்து காலையில் இந்த தண்ணீர் குடித்தால் உடல் எடை குறைய உதவுகிறது.
37
சிறுநீரக கற்கள்:
கொள்ளு தண்ணீரில் இருக்கும் சில சேர்மங்கள் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகின்றன. இந்த தண்ணீரை காலை குடிப்பதால் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும்.
கொள்ளு தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும். தேவையில்லாத ஊளைச்சதையை நீக்கவும் கொள்ளு தண்ணீர் உதவுகிறது. கொள்ளு சாப்பிடுவதால் வயிற்றுப் புண்கள் ஆறும்.
57
நச்சு நீக்கி!
கொள்ளு ஊற வைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். வெந்நீரில் கொள்ளு போட்டு நன்கு கொதித்த நீரை குடித்தால் சளி, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.
67
ஊட்டச்சத்துக்கள்
கொள்ளு முழுக்க கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள புரதச்சத்து தசைகளை மீட்க உதவும்.
77
தயாரிப்பது எப்படி?
ஒரு கைப்பிடி அளவு கொள்ளு எடுத்து அதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இந்தத் தண்ணீரை மறுநாள் காலையில் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம். அதனுடன் எடையும் குறையும். இதை செய்யாவிட்டால் கொள்ளுவினை தண்ணீரில் கொதிக்க விட்டு மிதமான சூட்டில் அதை குடிக்கலாம்.