தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் புற்றுநோய் வராது, நீரிழிவு பாதிப்பு ஏற்படாது..!!

First Published | Mar 8, 2023, 11:17 PM IST

கொய்யா பழங்களில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொய்யா பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம், பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.
 

Image: Getty Images

இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொய்யா பழங்கள் இரண்டு வகைகளில் விளைகின்றன. ஒன்று சிவப்பு நிற கொய்யா மற்றும் வெள்ளை நிற கொய்யா. இதில் சிவப்பு நிற கொய்யாவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயத்தில் பல்வேறு ஆய்வுகள் இரண்டு விதமான கொய்யாப் பழங்களிலும் பல நன்மைஅக்ள் ஒருங்கே இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் கொய்யாப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்ளலாம்.
 

Image: Getty Images

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்புச் சக்திக்கு வைட்டமின் சி முக்கிய ஆதாரமாகும். உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு ஆரஞ்சுப் பழங்களை விடவும், கொய்யா பழங்கள் நான்கு மடங்கு பலன் தருகிறது. இது பொதுவான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், இது நம் கண்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
 


Guava is a cure for many diseases to increase body strength!

புற்றுநோய் அபாயத்தைக் குறைகிறது

கொய்யாப்பழத்தில் உள்ள லைகோபீன், க்வெர்செடின், வைட்டமின் சி மற்றும் இதர பாலிஃபீனால்கள் சக்திவாய்ந்த ஆண்டிஆக்சிடண்டுகளாக உள்ளன. இவை நமது உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது. கொய்யா பழங்களை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு, கணையப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் பன்மடங்கு குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியையும் இது தடுக்கிறது.
 

guava

சர்க்கரை நோய்க்கு உகந்த பழம்

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம். இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதனால் இதை சாப்பிடும் போது நீரிழிவு நோய் பாதிப்பு குறைகிறது. குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. மேலும் கொய்யாப் பழத்திலுள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
 

திருமணம் 5 வகைப்படுகிறது- தெரியுமா உங்களுக்கு..?? தெரிந்துகொள்ளுங்கள்..!!

guava

இருதய ஆரோக்கியம் மேம்படும்

கொய்யா உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது. கொய்யா இரத்த அழுத்தத்தையும் சீராக்கும். கொய்யாப்பழம் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் இருதய நோய் அபாயம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
 

Latest Videos

click me!