Joint Pain : 30 வயசில் தீராத மூட்டு வலி வர காரணம் தெரியுமா? இந்த அறிகுறிளை அலட்சியம் பண்ணாதீங்க

Published : Jul 12, 2025, 02:07 PM IST

30 வயதிலேயே மூட்டு வலியா? மூட்டு வலிக்கான காரணங்கள் மற்றும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
14
30 வயதில் மூட்டு வலியா?

மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு தான் வரும் பிரச்சனை என்ற காலம் போய் தற்போது 30 வயதிலேயே மூட்டு வலியால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பின்லாந்தில் இருக்கும் ஒளலூ யுனிவர்சிட்டியில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் 30 வயதில் இருக்கும் நபர்களுக்கு மூட்டுகளில் அதிகம் சேதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறிந்துள்ளன. மேலும் இந்த அறிகுறிகளை பெரும்பாலானோர் கண்டு கொள்வதே கிடையாது.

அந்த ஆய்வில், கலந்து கொண்ட மூன்றில் ரெண்டு பங்கு உள்ளவர்களுக்கு மூட்டுகளில் சேதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதிகப்படியான எடை, உயர் இரத்த அழுத்தம், மரபணுக்கள் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கான ஆரம்ப அறிகுறிகளை முதலே கண்டு அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் மூட்டுகள் சேதமடைவதை தடுக்கலாம். எனவே 30 வயதிலேயே மூட்டு வலி வருவதற்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

24
30 வயதில் மூட்டுகள் சேதமடைய காரணமங்கள் :
  • அதிகப்படியான உடல் எடை உங்களது மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி குறுத்தெலும்பு உடைதல் மற்றும் சேதத்திற்கு வழிவகுக்கும்.
  •  உங்களது உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு உயரத்த அழுத்த பிரச்சனை இருந்தாலோ மூட்டில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகள் ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
  •  உங்களுடைய தாத்தா பாட்டி அல்லது பெற்றோருக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
  •  நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதுவும் காலை அசைக்காமல் இருந்தாலும் அல்லது மூட்டுகளை அதிகமாக பயன்படுத்தினாலோ மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும்.
  • மூட்டுகளில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் சில சமயங்களில் அவற்றின் காரணமாக மூட்டு வலி வரும்.
34
மூட்டுகள் சேதம் அடைவதற்கான ஆரம்ப அறிகுறிகள் :

1. இறுக்கம் - நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதுவும் காலை அசைக்காமல் இருந்த பிறகு காலில் ஒரு விதமான இறுக்கம் ஏற்பட்டால் கவனமாக இருங்கள்.

2. வீக்கம் - அவ்வப்போது மூட்டுகளில் வீக்கம் அல்லது குண்டாக இருப்பது

3. சத்தம் - நீங்கள் நடக்கும்போதோ அல்லது முழங்காலை வளைக்கும் போது, நேராக்கும் போது அதில் ஏதாவது சத்தம் கேட்டால் உங்களது குறுக்தெழும்பு தேய்மானமடைந்து இருக்கிறது என்று அர்த்தம்.

4. படிகளில் ஏறுவதில் சிரமம் - படிகளில் ஏறும்போது அல்லது உட்காந்து எழுந்திருக்கும் போது வலி அல்லது அசெளகரியமாக உணர்ந்தால் உங்களது மூட்டுகளில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

5. தொடர்ச்சியான வலி ஏற்படுதல் - வாக்கிங், ஜாக்கிங் அல்லது நீண்ட நேரம் நின்ற பிறகு முழங்கால்களில் வலி ஏற்பட்டால் உங்களது குருதெழும்பு வலுவிழந்து இருக்கிறது என்று அர்த்த

44
மூட்டுகள் சேதமிடுவதை தடுக்க வழிகள் :

- ஆரோக்கியமான உடல் எடை அவசியம்

- வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகள் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. அதற்கு பதிலாக உங்களது தசைகளில் வலுப்படுத்தி, உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

- நீங்கள் நின்று கொண்டிருந்தால் ஒரு காலின் மீது மற்றொரு காலை ஒருபோதும் வைக்க வேண்டாம். அதுபோல ஏதேனும் பொருளை தூக்கும்போது முதுகை ஒருபோதும் வளைக்க வேண்டாம். இது முழங்காலில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

- வைட்டமின் டி, கால்சியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மூட்டுகளை வலுவாக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories