Eating Bananas Before Bed : வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது சரியா? இது குறித்து ஆய்வுகள் என்ன சொல்லுகிறது என்று இங்கு பார்க்கலாம்.
இரவு தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? ஆய்வுகள் சொல்வது இதுதான்!
வாழைப்பழம் ஒரு சூப்பர் ஃபுட். ஏனெனில் இதில் விமானத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. இதுதவிர, வாழைப்பழத்தில் அதிகளவு கலோரிகள் உள்ளதால், இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். மேலும் இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் பல வகையான கனிமங்களும் உள்ளன. அந்தவகையில், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் வாழைப்பழத்தில் இரவில் சாப்பிடலாமா? அது நன்மை பயக்குமா? அல்லது திங்க விளைவிக்குமா? என்று உங்களுக்கு தெரியுமா? சிலர் இதைப் பற்றி முழுமையாக தெரியாமல் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக்கி உள்ளனர். இன்னும் சிலரோ இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி இருமலை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இது குறித்து ஆய்வு என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
ஆய்வின் பதில்:
பல வருடங்களாகவே இரவு தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக்கித்தில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆய்வில் வாழைப்பழங்கள் சத்தானவை என்றாலும் உண்மையில் இரவு தூங்கும் முன் இது சாப்பிடுவது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளது. ஏனெனில் இதனால் சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழைப்பழம் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே இதை சாப்பிட்டால் மிகுந்த சோம்பல் ஏற்படும். இது தவிர வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும், உடல் பருமனை அதிகரிக்கும்.
35
தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்' என்று மருத்துவங்கள் சொல்வது நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோலதான் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இதனால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்களது அன்றாட வழக்கத்தில் வாழைப்பழத்தை சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். முக்கியமாக வாழைப்பழம் தினமும் சாப்பிடுவதன் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழைப்பழம் உங்களது எடை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் உதவுகிறது. இதில் உடலுக்கு தேவையான நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆனால் இதை இரவு சாப்பிடுவது சரியானதாக கருதப்படவில்லை.
இரவு வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு உதவுமா?
வாழைப்பழத்தில் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், தூக்கத்தை தருகின்றன ஆனால் ஆஸ்துமா, சைனஸ், சளி மற்றும் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் மற்றவர்கள் மாலை வேலையில் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.