காலைல தண்ணீர் குடிக்கலாம்.. ஆனா வாக்கிங் போறப்ப தண்ணீர் குடிக்கலாமா?
தண்ணீர் குடிப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு அவசியமானது. நம்முடைய உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது அவசியம். நாம் போதுமான அளவில் தண்ணீர் குடிக்கும் போது தான் உடலில் உள்ள நச்சுக்கள் முறையாக வெளியேறும். குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீர் குடிப்பது தேவையாக உள்ளது. செரிமானம் மேம்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த, எடையைக் குறைக்க, ஆரோக்கியமான சருமத்திற்கு என அனைத்திற்கும் தண்ணீர் தேவை. வெறும் தண்ணீராக மட்டுமல்லாமல் பழச்சாறுகளையும் அருந்தலாம்.
25
வாக்கிங் போகும் போது தண்ணீர் குடிக்கலமா?
ஒரு நாளுக்கு 2000 கலோரிகளை எடுத்துக் கொள்ளும் ஒரு பெண் 2 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். இதுவே ஆண்களுக்கு சற்று மாறுபடும். 2500 கலோரிகளை உட்கொள்ளும் ஒரு ஆண் 2.5 லிட்டருக்கு அதிகமான தண்ணீரை குடிப்பது நல்லது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியம். ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடிக்கலாம். தண்ணீர் நல்லது செய்தாலும், நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிக்கலாமா? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
35
நடக்கும்போது தண்ணீர் குடிக்கலமா?
நீங்கள் நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் அருந்துவது உங்களுடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். படபடப்பு, சோர்வு, தலைவலி போன்ற நீரிழப்பிற்கான அறிகுறிகளை தடுப்பதற்கு நடக்கும் போது சிறிதளவு தண்ணீர் அருந்தலாம். நீங்கள் நடக்கும் போது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கொஞ்சமாக தண்ணீர் குடிக்கலாம். இதனால் உங்களுக்கு சோம்பலான உணர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நீங்கள் நடக்கும் இடத்தைப் பொறுத்து தண்ணீர் அருந்தும் அளவு மாறுபடும் ஒருவேளை நீங்கள் உயரமான இடத்தில் நடந்தால் அதிகமான வெப்பம் அல்லது ஈரமான வானிலை நிலவினால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
45
எப்படி தண்ணீர் அருந்த வேண்டும்?
ஐஸ் வாட்டரை தவிர்க்க வேண்டும். சாதாரண நீரை விட மிதமான சூட்டில் உள்ள நீர் அருந்தலாம். நீங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடப்பவராக இருந்தால் எலக்ட்ரோலைட்ஸ் கலந்த பானம் அருந்தலாம். இவை மெடிக்கலில் கிடைக்கும். வீட்டில் தயார் செய்யும் உப்பு கலந்த எலுமிச்சை நீர் அருந்தலாம். காலையில் சர்க்கரை கலக்காத காபி அருந்துவது நடக்கும் போது உற்சாகமாக இருக்கும். இது தவிர சூப் குடிக்கலாம். அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது நடக்கும்போது சிரமத்தை தரலாம். அதனால் நடக்கும்போது குறைவாக தான்ணீர் அருந்துங்கள். நடந்து முடித்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அதிகமான அளவில் தண்ணீர் குடிக்கலாம்.
உங்களுடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்த சிறிதளவு தண்ணீர் குடிப்பது உதவிகரமாக இருக்கும். உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து, ஆற்றலை அதிகரிக்கிறது. சோர்வு நீங்கி புத்துணர்வாக நடப்பதற்கு சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.