பெரும்பாலான தென்னிந்தியர்கள் காலை எழுந்தது காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பலருக்கு காபி குடிக்காமல் எந்த ஒரு வேலையும் செய்ய தோணாது. சிலருக்கோ வெறும் வயித்துல ஒரு கப் காபி குடித்தால் தான் காலை கடனை கழிக்க வரும் என்று சொல்லுவார்கள். ஆனால் உணவு ஏதும் சாப்பிடாமல் காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லதல்ல. அதனால் பல உடல்நல பிரச்சனைகள் வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கும் காலை எழுந்ததுமே வெறும் வயித்துல காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை குறித்து இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
26
செரிமான பிரச்சினைகள் :
தினமும் காலை வெறும் வயிற்றில் பால் சேர்த்த காபி குடித்தால் பிரச்சனைகள் ஏற்படும். வயிற்று தசைகள், குடலில் எரிச்சல் ஏற்படும். இது தவிர வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். குறிப்பாக சென்சிட்டிவான செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினை ஆகியவையும் ஏற்படும்.
36
பதட்டம்
காலையில வெறும் வயிற்றில் பால் சேர்த்த காபி குடித்தால் மனதில் அமைதியின்மை, பதட்டம் ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே மன ரீதியான பிரச்சினைகள் இருந்தால் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
பல பேர் தலைவலி வரும்போது எல்லாம் சூடாக ஒரு கப் காபி குடிப்பது விரும்புகிறார்கள். ஆனால் காபி தலைவலியை ஏற்படுத்தும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தினமும் காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை, தீராத தலைவலியும் ஏற்படும். ஏனெனில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதிலும் குறிப்பாக லோ சுகர் பிரச்சனை உள்ளவர்களுக்கு நீரிழிப்பால் தீராத தலைவலி ஏற்படும்.
56
தூக்கமின்மை
நீங்கள் தினமும் இரவு சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது தான் இதற்கு காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தினமும் காலை வெறும் வயிற்றில் காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இரவில் தூக்கமின்மை பிரச்சனை வரும் என்று ஆய்வுகளில் கண்டறிந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் மாலை வேலையில் அதிகமாக காபி குடித்தாலும் இரவு சரியாக தூக்கம் வராது.
66
ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் பாதிப்பு
வெறும் வயிற்றில் பால் காபி குடித்தால் பாலில் இருக்கும் கால்சியத்தை உடலானது சரியாக உறிஞ்ச முடியாமல் போகும். அதுமட்டுமில்லாமல் காலை சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடலானது உறிஞ்சி கொள்வதில் சிரமமாக இருக்கும்.