
அனைத்து வயதினரும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சிதான் நடைபயிற்சி ஆகும். இதற்கு தனிப்பட்ட உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பயிற்சியினை செய்ய முடியும். பொதுவாக நடைபயிற்சியானது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியது. மிதமான கார்டியோ பயிற்சியான இதனை ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் செய்வது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நாம் தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துவது இதற்காகத்தான். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, தசைகளை வலுப்படுத்த, மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை சீராக்க நடைபயிற்சி சிறந்த பயிற்சியாக இருக்கும். இது மிதமான பயிற்சி என்பதால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தாது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் நடைபயிற்சி செய்யலாம்.
குழந்தைகளுடைய உடல் செயல்பாடுகளை அதிகப்படுத்த நடைபயிற்சி நல்ல தீர்வாகும். இது குழந்தைகளின் எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது. உடலுக்கு ஒருங்கிணைப்பை அளித்து ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்கிறது. சிறுவயதில் நடைபயிற்சி செல்ல பழக்குவது அவர்களுக்கு உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டும். இதுவே பின்னாளில் ரன்னிங் உள்ளிட்ட உடற்செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தும். தினமும் 60 நிமிடங்களாவது குழந்தைகளுக்கு சுறுசுறுப்பான உடல் செயல்பாடு இருக்க வேண்டும்.
டீன் ஏஜில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க நடை பயிற்சி அத்தியாவசியமானது என்று சொல்ல வேண்டும் இது அவர்களுடைய குழப்பங்களை மன அழுத்தத்தை நிறுவ வைத்து மனதை இலகுவாக வைத்திருக்கும் சகிப்புத்தன்மையை மேம்படுத்த நடைபெற்று வருகிறது ஒரு நாளுக்கு முப்பது முதல் 60 நிமிடங்கள் வரை டீன் ஏஜ் வயதில் உள்ளவர்கள் நடைபெற்று செய்யலாம் மேலும் இது அவர்களுடைய எடை மேலாண்மைக்கும் சிறந்த பயிற்சியாக இருக்கும் உடல் பருமனை ஏற்படாமல் தடுத்து எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
எடையை கட்டுக்குள் வைத்திருக்க இப்பயிற்சி அவசியம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நடைபயிற்சி உதவுகிறது. 40 வயதுக்கு மேல் இந்த நாள்பட்ட நோய்களை தடுக்கவும் தினமும் நடைபயிற்சி செய்யலாம். நடப்பது மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை சீராக வைத்திருக்கும். பெரியவர்கள் வாரத்திற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக விறுவிறுப்பான நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு கூடுதலான நன்மைகளை செய்கிறது. இது தவிர தினமும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறுதல், மதியம் மற்றும் இரவு உணவுக்கு பின் ஒரு குறுநடை போடுதல் போன்றவை பழக்கத்தில் வைத்திருக்க வேண்டியவை ஆகும்.
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் நடப்பது அவர்களுடைய உடல் சமநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. வயதான பிறகு ஏற்படக்கூடிய இதய பிரச்சனைகளை தவிர்க்க, ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க மட்டுமின்றி, நடக்கும்போது தடுமாறி கீழே விழும் அபாயத்தை தடுக்கும் வகையில் சமநிலையை மேம்படுத்த நடைபயிற்சி சிறந்த பயிற்சியாகும். முதியவர்களுக்கு ஏற்படும் கீழ்வாதத்தை குறைக்கவும், தனிமையே போக்கி மனநிலையை மேம்படுத்தவும் நடைபயிற்சி உதவுகிறது. வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் 20 முதல் 30 நிமிடங்கள் நடந்தால் கூட போதுமானது. இடையிடையே ஓய்வு எடுத்தப்படி விறுப்பாக அல்லது மெதுவாக நடப்பது நல்லது.