Fenugreek For Weight Loss : உடல் எடையை கிடுகிடுனு குறைக்கும் வெந்தயம்! எப்படி சாப்பிட்டா முழுநன்மை

Published : Oct 11, 2025, 10:21 AM IST

உடல் எடையை வேகமாக குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

PREV
17
Fenugreek Seeds For Weight Loss

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவு முறைதான் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான முயற்சிகளை செய்து வருகின்றன. ஒரு சிலரோ உடல் எடையை குறைக்க பல விதமான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றன. ஆனால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் பல நோய்களையும் உண்டாக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கலாம். இதற்கு வெந்தயம் உங்களுக்கு உதவும். ஆம், வெந்தயத்தை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.

27
வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்துக்கள், புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே, இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் வயிற்றை சுற்றியிருக்கும் கொழுப்பும் கரைந்துவிடும். இது தவிர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இதே ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெந்தயம் உதவுகிறது. இப்போது உடல் எடையை குறைக்க வெந்தயத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

37
வெந்தய நீர் :

வெந்தை நீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைத்து விடலாம். இதற்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்துவிட்டு பிறகு மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

47
வெந்தயம் மற்றும் தேன் ;

வெந்தயம் மற்றும் தேன் கலவையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதற்கு வெந்தயத்தை பேஸ்ட் போலாக்கி அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடை வேகமாக குறைவது மட்டுமல்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

57
வெந்தயத்தில் 'டீ' :

உடல் எடையை விரைவாக குறைக்க வெந்தயத்தை தேநீராக குடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக வந்ததும் வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும்.

67
முளைத்த விந்தை விதைகள் :

முளைவிட்ட வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும்.

77
வறுத்த வெந்தயம் :

இதற்கு தேவையான அளவு வெந்தயத்தை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து, ஆற வைத்து பொடியாக்கி அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்தால் கெட்டுப் போகாது. நீண்ட நாள் வரை பயன்படுத்தலாம். இப்போது தயாரித்த இந்த பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பும் வேகமாக குறையும்.

மேலே சொன்ன வழிமுறைகள் படி வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கும். ஆனாலும் வெந்தயத்தை எடுக்கும் முன் ஒரு முறை மருத்துவரை அணுகுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories