Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல செய்தி! இதை தவறாமல் பண்ணா இதய நோய் கிட்டகூட வராது

Published : Nov 18, 2025, 10:55 AM IST

சர்க்கரை நோயாளிகள் இதயநோய் வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

PREV
15
Diabetes and Heart Disease Risk

சர்க்கரை நோய் வளர்சிதை மாற்றக் கோளாறால் ஏற்படுகிறது. இந்த நோய் வந்த பின்னர் கூடவே இரத்த அழுத்தம், பார்வை கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சினைகளும் சிலருக்கு ஏற்படுகிறது. இதில் இதய நோய்க்கான ஆபத்தும் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு, சில ஆரோக்கிய நடவடிக்கைகளையும் செய்வதன் மூலம் இதயப் பிரச்சினைகளை தடுக்க முடியும். இந்தப் பதிவில் அது குறித்து காணலாம்.

25
எடைக் கட்டுப்பாடு

உங்களுக்கு சர்க்கரை நோயும், கூடவே உடல் பருமனும் இருந்தால் முதலில் எடையைக் குறைக்க வேண்டும். தொப்பை இருந்தால் அதைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, எடை குறைப்பு செய்ய வேண்டும். நீங்கள் 5% ஆரோக்கியமான முறையில் எடையை குறைப்பது கூட உடல்நலத்திற்கு மிகுந்த பலனளிக்கும்.

35
நடைபயிற்சி

நாள்தோறும் நடைபயிற்சி அல்லது கார்டியோ போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். அமர்ந்த வாழ்க்கை முறையை சற்று மாற்றி சுறுசுறுப்பாக இருங்கள். 40 நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர வேண்டாம். எழுந்து 5 நிமிட குறுநடை போட்டு பின் அமரலாம். குறிப்பாக யோகா அல்லது தியானம் செய்யுங்கள். இது மன அழுத்த ஹார்மோன் சுரப்பைக் குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

45
உணவுப் பழக்கம்

எல்லா சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிடுங்கள். அதிகமான கார்போஹைட்ரேட், எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிருங்கள். துரித உணவுகள், இனிப்பு பண்டங்களை தவிர்த்தால் மெட்டபாலிசம் மேம்படும். கேழ்வரகு, சாமை, குதிரைவாலி போன்ற முழு தானியங்ககை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீன், முட்டை, சிக்கன் ஆகிய புரத உணவுகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். பச்சைக் காய்கறிகளான பீன்ஸ், வெண்டைக்காய், சுரைக்காய், சௌ சௌ போன்றவை, கீரைகளை உண்பது நல்லது. வாழைப்பழம் தவிர ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, நெல்லிக்காய் ஆகியவை எடுத்துக் கொள்வது நல்லது.

55
மது, புகையை கைவிடுங்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிருங்கள். இது இதய நோய் ஆபத்தை அதிகரிக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வர இந்தப் பழக்கங்களை விட வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து மருத்துவரிடம் மருந்துகள் வாங்கி பயன்படுத்த வேண்டும். பரிசோதிக்காமல் மருந்துகள் மட்டுமே உட்கொள்வது நல்லதல்ல. அதை செய்யாமல் தவிர்க்க வேண்டும். இது தவிர மேலே சொன்ன ஆரோக்கியமான பழக்கங்களை கொண்டிருந்தால் போதுமானது.

Read more Photos on
click me!

Recommended Stories