Japanese Walking Technique for Back Pain and Joint Pain
சிலருக்கு நாள்பட்ட முதுகு மற்றும் மூட்டு வலி அவஸ்தையை கொடுக்கும். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பல மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இயற்கை முறையில் அதில் இருந்து நிவாரணம் பெற ஜப்பான் நடைபயிற்சி உதவுகிறது. வழக்கமான முறையில் வாக்கிங் செல்வது முதுகு, மூட்டு வலிக்கு நிவாரணத்தை அளித்தாலும் ஜப்பானின் இந்த டெக்னிக் முற்றிலும் நிவாரணம் கிடைக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
25
ஜப்பான் வாக்கிங்
ஜப்பானிய வாக்கிங் என்பது திட்டமிடப்பட்ட மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் நடக்கும் பயிற்சியாகும். இதில் மூன்று நிமிடம் விறுவிறுப்பாக நடக்க வேண்டும். பின்னர் மெதுவான வேகத்துடன் மூன்று நிமிடங்கள் நடக்க வேண்டும். இப்படியாக சுழற்சி முறையில் 30 நிமிடங்கள் விறுவிறுப்பாகவும் மெதுவாகவும் நடந்து முடிக்க வேண்டும். இது உடலில் உள்ள சோர்வை நீக்கும். மன அழுத்தம் நீக்கி உடற்திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த பயிற்சியாக ஜப்பானில் கருதப்படுகிறது.
35
சிறந்த கார்டியோ
இந்த நடைபயிற்சியில் உடல் தசைகள் வலிமையாவதோடு முதுகு, மூட்டு தசைகளும் வலுவடைகின்றன. இதனால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. ஜப்பான் வாக்கிங்கில் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும் இது சிறந்த கார்டியோ பயிற்சியாக கருதப்படுகிறது இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
ஒவ்வொரு காலடியிலும் வயிற்று, பின்புற தசைகளை ஈடுபடுத்துவதால் முதுகெலும்பு வலுவாகும். மூட்டுகளைச் சுற்றி இருக்கும் தசைகளை பலப்படுத்தி பாதுகாக்கிறது. ஜமா நெட்வொர்க்கில் வெளியான ஆய்வில், ஒரு நாளில் 100 நிமிடங்களுக்கு மேல் நடந்தவர்கள் அதைவிட குறைவாக நடந்தவர்களை ஒப்பிடும்போது நாள்பட்ட வலிக்கு 23% குறைவான ஆபத்தை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
55
எப்போது செய்ய வேண்டும்?
வாரத்தில் 5 நாட்களில் 30 நிமிடங்கள் நடந்தால் போதும். இதுவே போதுமானது. மற்ற நாள்கள் ஓய்வு நாள்களாக கருதலாம்.