பிறவியிலேயே குழந்தைகள் குறையுடன் பிறப்பதை தடுக்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் அதை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. மரபணு மாற்றங்கள், இதய பிரச்சனைகள், அன்ன பிளவு ஆகியவை பிறப்பு குறைபாடுகளில் சில நோய்களாகும்.
பிறப்பு குறைபாடுகளை தவிர்க்க ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு உதவுகிறது. இது அத்தியாவசியமான பி வைட்டமினாகும். ஒருவேளை கர்ப்பிணிக்கு ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், நரம்பு குழாய் குறைபாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஃபோலிக் அமில குறைபாட்டை தவிர்க்கும் வழிகளை இங்கு காணலாம்.