நகர்ந்து கொண்டிருக்கும் இயந்திர உலகில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தூக்கம் என்பது இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆம், நாள் முழுக்க உழைத்து களைத்தவர்களுக்கு தூக்கம் தான் ஓய்வைத் தருகிறது. இளவயது குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எனத் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் இன்றியமையாதது தூக்கம் தான். இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும், ஒரு நாளில் 7 மணி நேரம் தூங்குவதே கடினமான விஷயமாக மாறி விட்டது. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.