Dragon Fruit : டிராகன் பழம் குறித்து நீங்கள் அறிந்திராத முக்கியமான 5 விஷயங்கள்..!!

First Published Oct 18, 2022, 3:58 PM IST

அதிக நீரேற்றம் கொண்ட இந்த பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்துக்காக டயட்டை கடைப்பிடிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பழமாக இருந்து வருகிறது.
 

dragon fruit

டிராகன் பழத்தை பார்க்கும் போது சற்று மிரட்டலாக இருந்தாலும், அதனுள் இருப்பவை அனைத்தும் சத்துக்களாகும். முற்றிலும் பழக்கூழ், அங்காங்கே தட்டுப்படும் விதைகள் என இதனுடைய தன்மையாக அழகாக இருக்கும். இவை சிவப்பு டிராகன் பழம் மற்றும் வெள்ளை டிராகன் பழம் என இரண்டு வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல இன்னும் சில நாடுகளில், இது பல வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பழத்தின் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. உடலுக்கு தேவையான முக்கிய வைட்டமின் சி ஊட்டச்சத்து அதிகமுள்ளன. இருதய நலனுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகளும் இதில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பழத்தை அளவுடன் எடுத்துக்கொண்டால், நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

உடல் நலனுக்கு பாதுகாப்பு

பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், டிராகன் பழம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

புதிய அப்பாக்கள் குழந்தையுடன் உறவை வளர்ப்பதற்கான முக்கிய டிப்ஸ்..!

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்

இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அவ்வப்போது ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் டிராகன் பழ விற்பனை அமோகமாக இருந்தது.

Dragon Fruit

செரிமானத்துக்கு நல்லது

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் செரிமானப் பிரச்னைகளால் அவதியுற்று வருகின்றனர். ஒருசிலருக்கு உணவுகள் செரிமானமாக நேரம் எடுக்கும், மற்ற தரப்பு மக்களுக்கு செரிமானம் உடனுக்குடன் ஏற்படும். இதனால் உடலின் இயக்க நிலையே பாதிக்கப்படும். அதுபோன்ற பிரச்னைகளை கொண்டவர்கள், டிராகன் பழத்தை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது செரிமானத்துக்கு உதவும்.

மழைக்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?

Dragon Fruit

நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்

இந்த உலகத்தில் பாவப்பட்டவர்கள் நீரிழிவு நோயாளிகள் தான். அவர்கள் சாப்பிடக்கூடியது சொற்பமான பொருட்கள் தான். ஆனால் அவர்கள் சாப்பிடக்கூடாதது எண்ணற்றவை. அந்த வகையில் டிராகன் பழகங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.  இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க டயட் செய்பவர்களும் சாப்பிடலாம். 

Dragon Fruit

சருமம் ஆரோக்கியமாகும்

டிராகன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சரும சுருக்கங்களைப் போக்கி, சருமம் பளபளப்பாக இருக்கும். டிராகன் பழத்தைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளைத் தயாரித்து முயற்சிப்பதும் உங்களுடைய புற அழகை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
 

click me!