Belly Button: தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்ந்து விடாமல் சுத்தம் செய்வது ஏன் அவசியம் .? மிஸ் பண்ணீடாதீங்கோ.!

First Published Oct 18, 2022, 1:02 PM IST

Belly Button Cleaning: தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்ந்து விடாமல், சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய காலத்தில் காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்கின்றோம். ஆனாலும், பயனில்லை பெரும்பாலனோர் காக்க குளியல் போட்டு விட்டு வருவார்கள். இன்னும், சிலர்  குளிக்கும் போது பிறப்புறுப்புகள், அக்குல், ஆசன வாய் பகுதிகளில் மட்டும் சோப்பு போட்டு குளிப்பார்கள். ஆனால், நாம் குளிக்கும்போது நமது தொப்புளை சுத்தம் செய்ய மறக்க கூடாது.  அதிலும் பெண்கள், தங்களது தொப்புளை சுத்த‍மாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியத்தின் அவசியமாகவே கருதப்படுகிறது.

தொப்புள் அழகு மற்றும் ஆரோக்கியமான விஷயம் நிறைந்தவை. நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக இருப்பது நம்முடைய தொப்புள் ஆகும். கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. பெண் கருத்தரிக்கும் பொழுது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் தான் குழந்தையை சென்று அடைகிறது.  

அத்தகை அற்புதம் வாய்ந்த தொப்புளை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்,  இல்லையெனில் அதில் பாக்டீரியாக்கள், அழுக்கு, எண்ணெய் சேர்ந்து பலவிதமான தொந்தரவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தொப்புள்ளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம். 

தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்ந்து விடாமல் சுத்தம் செய்வது எப்படி ..?

மாய்சுரைசர்

உங்களது தொப்புளை சுற்றியுள்ள பகுதிகளை எப்போதும்  ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தொப்புளை சுற்றியுள்ள பகுதிகளில் நீங்கள் மாய்சுரைசர் தடவ வேண்டியது அவசியமாகும். இதனால் தொப்புள் பகுதிகளில் அரிப்புகள், எரிச்சல், பாக்டீரியாக்கள் உண்டாவதை தடுக்கலாம். 

தொப்புளில் தேங்காய் எண்ணெய்: 

 தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடு தொப்புளில் வைப்பதால், அழுக்கு வெளியேறுவதுடன், கண்கள் வறட்சியாடையமால் குளிர்ச்சி பெரும். கண்பார்வை குறைபாடு வராது , பித்த வெடிப்பு குறையும். மற்றும் தொப்புள் மென்மையாக இருக்கும்.

Beauty Tips-Bathe in salt water once a week

உப்பு கொண்டு சுத்தம் செய்யலாம்:

தொப்புளை அதிக அழுக்கு சேர்ந்து விடாமல் இருக்க உப்பு கொண்டு சுத்தம் செய்யலாம். அதற்கு தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து, சுத்தமான காட்டன் துணியை கொண்டு தொப்புளின் உள் பகுதியை மென்மையாக சுத்தம் செய்யவும். தொப்புள் அணிகலன் பயன்படுத்து பவரும், இந்த முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...தலையில் பொடுகு, முடி உதிர்வு தொல்லையா? முற்றிலும் விடுபட இந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் போதும்

 ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யலாம்:

முதலில் தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய தினமும் குளிக்கும் போது, கொஞ்சம் சோப்பு அல்லது மிதமான ஷாம்பூ தண்ணீரில் கரைத்து தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள். பின்னர்,  ஒரு மென்மையான துண்டு அல்லது பஞ்சால் துடைத்து விட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.தொப்புள் ஈரமில்லாமல் வறண்டுவிடும்.

மேலும் படிக்க...தலையில் பொடுகு, முடி உதிர்வு தொல்லையா? முற்றிலும் விடுபட இந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் போதும்

click me!