முடி உதிர்வு பிரச்சனையை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகாரிக்கு முடி உதிர்வு, பொடுகை போன்றவற்றை ஏற்படுத்தும். பலருக்கு தலையில் வழுக்கை கூட ஏற்படுகிறது. இப்படிக் கொத்து கொத்தாக முடி உதிர்வதை எப்படித் தடுப்பது என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
முதலில் அதற்கு ரோஸ் வாட்டருடன் படிகாரப் பொடியை பேஸ்ட் செய்து, இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவினால் போதும். இந்த பேஸ்டை வாரத்தில் இரண்டு நாள் தலையில் வைத்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இளநரை சீக்கிரம் கருப்பாக மாறும் இளநரை வருவது தள்ளிப் போகும்.
hair loss
கொய்யா இலை 5, முருங்கை கீரை 1 கைப்பிடி அளவு, இந்த இரண்டையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த சாறுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி, நன்றாக கலந்து தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு தலைக்கு குளித்தால் முடி கருகருவென வளரத் தொடங்கும்.
hair falling
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த படிகாரம் அல்லது படிகாரக் கல்லை தேங்காய் எண்ணெயுடன் கலந்து இந்த முறையில், தலையில் தடவி வந்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முடி வேகமாக வளரவும், முடி வளர்ச்சி சிறப்பாகவும் இருக்கும். சிலருக்கு குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனை அதிகமாகும். படிகாரப் பொடியைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.