பூமியில் நான்கு விதமான தட்பவெட்ப நிலைகள் உள்ளன. அதில் பசியை தூண்டும் காலநிலையாக இருப்பது மழைக்காலம் மட்டுமே. அப்போது தான் காரசாரமான உணவு சாப்பிட வேண்டும் என்றும், சூடாக ஏதாவது உண்ணலாம் என்றும் தோன்றும். அதுவும் பெண்கள் யாரேனும் கர்ப்பமாக இருந்தால், இந்த நிலைமை சமாளிப்பது கடினம் தான். ஆனால் மழைக்காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் குறிப்பிட்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். அதுகுறித்து விரிவான தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வைட்டமின் சி
சிட்ரஸ் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி இடம்பெற்றுள்ளன. ஆனால் காலநிலை மாறியதும் பலரும் குளிர்ச்சிக் காரணமாக சிட்ரஸ் கொண்ட எலுமிச்சைப் பழம், ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடுவதை அவர்கள் நிறுத்திவிடுவர். கர்ப்பிணி பெண்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள குழந்தைக்கு இரும்புச் சத்து சென்று சேரும். பழங்கள் மிகவும் புளிப்பாக இருந்தால், கொய்யாப் பழம், பருப்பு மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் உணவுகள்
மழைக் காலம் வந்துவிட்டால் தயிர் சோற்றைக் கூட பலரும் தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். தயிர் மற்றும் மோர் போன்ற புரோபயாடிக் உணவுகள் குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் தேவைப்படக் கூடிய புரதம் மற்றும் கால்சியம் தேவைகள் இதன்மூலம் கிடைக்கும். புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக் உணவுகள் வளர்ச்சியை அதிகரிக்கின்றன, மேலும் கெட்ட பாக்டீரியா அல்லது நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
இனிமேல் உருளைக் கிழங்கு தோல்களை சீவி தூக்கிப் போட்றாதீங்க..!! அவ்வளவும் சத்துங்க..!!
திரவ உணவுகள் சாப்பிடுவது முக்கியம்
மழைக்காலங்களில் நீராகாரம் சாப்பிடுவது வெகுவாகவே குறைந்துவிடும். ஆனால் உடலுக்கு தினந்தோறும் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது. அதனால் திரவு உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நன்மை தரும். இதனால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சு வெளியேறிவிடும். கர்ப்பமான பெண்கள் முடிந்தவரை வெந்நீர் குடிப்பது நல்லது. அதேபோல சூப், பிராத் மற்றும் இளநீர் குடிப்பதும் அவர்களுடைய உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரும்.
Vegetables
காய்கறிகள் சாப்பிடுவது கட்டாயம்
புடலங்காய், சேனைக் கிழங்கு, உருளைக் கிழங்கும், சோளம், சுரைக்காய் மற்றும் பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை அடிக்கடி கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்து வரவேண்டும். குறிப்பிட்ட இந்த காய்கறிகளை குழம்பாகவும், சூப்பாகவும், ரைதாவாகவும், சாலடாகவும் செய்து சாப்பிடலாம். சக்கரவள்ளிக் கிழங்குகளை சிப்ஸ் போல செய்து சாப்பிடுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
உடலுக்கு 7 மணிநேரம் தூக்கம் அவசியம்- ஏன் தெரியுமா?
இஞ்சி மற்றும் பூண்டை மறந்துவிட வேண்டாம்
இஞ்சி மற்றும் பூண்டில் ஆண்டி வைரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இதனால் கர்ப்பகாலத்தில் காய்ச்சல், சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தற்காத்திடும். கிரேவிகள், சட்னிகள் மற்றும் சூப்களில் பூண்டை சேர்த்து வருவதிலும் அதிக நன்மை உள்ளது. துளசி தேநீர், துளசி நீர் மற்றும் இஞ்சி- துளசி சேர்ந்து செய்யப்படும் தேநீர் போன்றவை ஆரோக்கியத்தை நீட்டிக்கும்.