காதலுக்கும், உறவுக்கும் வயது எப்போதும் ஒரு தடையாக இருப்பதில்லை. அதிலும், திருமணம் செய்து கொள்ளும் போது தன்னை விட வயதில் மூத்த ஆண்களை, டேட்டிங் செய்து பெண்கள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். என்ன தான் காலம் மாறினாலும், நம்முடைய பெற்றோர்களும், தங்கள் பெண்ணுக்கு மாப்பிளை பார்க்கும் போது, வயதில் மூத்த ஆண்களை நாடுகிறார்கள். அவ்வளவு ஏன் சினிமா துறையில் கூட நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வதை நாம் பார்த்திருப்போம்.
நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி முதல் தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் கரீனா கபூர், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் வரை இது போன்ற பல திருமணங்களை நாம் பார்த்திருப்போம். இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
பெண்கள் ஏன் வயதான ஆண்களுடன் உறவில் இருக்க விரும்புகிறார்கள்?
ஒரு உறவில் ஈடுபட விரும்பும் பெண்கள், வாழ்க்கையில் செட்டில் ஆன நபர்களை தேடும் போது முதிர்ச்சியடைந்த ஆண்களிடம் எளிதில் விழுகின்றனர். காரணம், பெரும்பாலன பெண்கள் இளம் வயதில் தங்களது பெற்றோரிடத்தில் மிகுந்த அன்பை செலுத்துபவர்களாகவும், அன்பை பெறுபவர்களாகவும் இருப்பர்.எனவே அதே அன்புதான் தங்களதுதுணையை தேடும்போது வெளிப்படுகிறதாம்.
தங்கள் தேவைகளை பூர்த்திசெய்ய கூடியவர்கள்:
முதிர்ந்த ஆண்கள் தங்களுக்கு வாழ்க்கையில் எந்த தேவை என்பதை அறிந்து கொண்டு அதனை பூர்த்தி செய்வார்கள். பொதுவான, இளம் வயதினரை காட்டிலும் வயதான ஆண்கள் நிதிரீதியாக மிகவும் நிலையானவர்கள். இதனால் தங்கள் தேவைகள் எளிதில் பூர்த்தியடையும் என்பதை பெணகள் உணர்ந்தவர்கள்.
செக்ஸ் விஷயத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள்:
வயதான ஆண்கள், இளம் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு தனித்துவமான கவர்ச்சியைக் கொண்டுள்ளனர். இவர்களின் புத்திசாலியான பேச்சால் வயதான ஆண்கள், மீது பெண்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். பாலியல் உறவு என்று வரும் போது, சந்தேகமே இல்லாமல் வயதான் ஆண்கள் தான் சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக, தனது பார்ட்னரை எப்படி திருப்தி படுத்துவது என்பதைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள். ஒருவேளை, ஒரு பெண் உறவில் தனக்கு பிடிக்காததைப் பற்றி கூறினாலும், அதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.