வெறும் வாக்கிங்ல எடையை குறைக்கனுமா? நடக்குறப்ப இந்த '1' ட்ரிக் பண்ணா போதும்!! 

Published : Feb 10, 2025, 08:31 AM IST

Loaded Rucksack For Weight Loss :  நடைபயிற்சியில் செய்யும் ஒரு சிறிய மாற்றம் எடையை குறைக்க உதவுகிறது. அதை இங்கு காண்போம்.   

PREV
16
வெறும் வாக்கிங்ல எடையை குறைக்கனுமா? நடக்குறப்ப இந்த '1' ட்ரிக் பண்ணா போதும்!! 
வெறும் வாக்கிங்ல எடையை குறைக்கனுமா? நடக்குறப்ப இந்த '1' ட்ரிக் பண்ணா போதும்!!

ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடைபயிற்சி செய்திருக்க வேண்டும். அப்படி செய்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைபயிற்சியை முழு உடல் பயிற்சியாக மாற்ற ஒரு வழி உள்ளது. நீங்கள் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்யும்போது இந்த விஷயத்தை பின்பற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த முறையில் நடந்தால் நிச்சயமாக விரைவில் எடையை குறைக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது என்ன முறை? எப்படி பின்பற்ற வேண்டும்? என்பதை இந்த பதிவில் காணலாம். 

26
எடை குறைப்பு:

ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது முதுகில் எடையை சுமந்தபடி பயிற்சி அளிக்கப்படும். இதனை இது அவர்களுடைய ஆற்றலையும், உடல் உறுதியையும் அதிகரிக்க உதவும் முறையாகும். இந்த முறையை நடைபயிற்சி செய்யும்போது பின்பற்றினால் எடையை விரைவில் குறைக்கலாம். ஆனால் எவ்வளவு எடை என்பது முக்கியமான விஷயமாகும். நடைபயிற்சி செய்யும்போது முதுகில் கொஞ்சம் எடையை சுமந்து நடப்பதால் உடல் எடையில் 5 முதல் 7% வரை குறையும். உடலில் உறுதியும் தசைகள் மேம்படவும் இந்த பயிற்சி உதவும். 

இதையும் படிங்க:  புதுசா வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த '5' விஷயங்கள் முக்கியம்!! 

36
எவ்வளவு எடை?

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க இந்த பயிற்சி உதவும். ஆனால் அதற்காக நீங்கள் அதிகமான எடையை சுமந்தபடி நடப்பது தவறாகும். நீங்கள் தொடர்ந்து நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால் இந்த பயிற்சியை முயற்சி செய்ய வேண்டாம்.  தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமே எடைகளுடன் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளை பழக்கம் இல்லாத நபர்கள் இதை செய்யும்போது முதுகு, கழுத்து ஆகிய பகுதிகளில் வலி ஏற்படலாம். அதனால் உடலில் வலு இல்லாதவர்கள், ஏற்கனவே பிட்னஸ் கவனம் இல்லாதவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல் எடையிலிருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமான எடையை சுமந்தபடி நடப்பது தவறு. உங்கள் உடல் எடை 100 கிலோவாக இருக்கும்பட்சத்தில் அதில் 10% என்பது 10 கிலோவாகும். நீங்கள் 10 கிலோவிற்குள் மட்டுமே முதுகில் சுமந்து நடக்க வேண்டும். வயிற்று பகுதிக்கும் மேல் உடலின் மைய தசைகளை ஆக்டிவேட் செய்து நடப்பது நன்மை பயக்கும். 

46
இந்த விஷயம் கவனம்!

நடக்கும்போது நேரே பார்த்தபடி நிமிர்ந்த தோற்றத்தில் நடக்கவேண்டும். குனிந்து கீழே பார்த்தப்படி நடக்கக் கூடாது. நீங்கள் எடுத்துச் செல்லும் எடை, தூரம் இரண்டையும் படிபடியாக அதிகரிக்கலாம். சத்தான அளவான உணவு, வலிமை பயிற்சி, கார்டியோ பயிற்சி போன்றவை முறையாக கடைபிடித்தால் ஆரோக்கியமான முறையில் விரைவில் எடையை குறைக்கலாம்.  

இதையும் படிங்க:  நோய்களை நீக்கும் வெறுங்கால் வைத்தியம்.. பலர் அறியாத வாக்கிங் 'டிப்ஸ்'

56
எந்த மாதிரி எடை?

நீங்கள் இருபுறமும் அணியக்கூடிய பையில் புத்தகங்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வைத்து லேசான எடையுடன் நடக்கலாம். குறைந்தபட்ச எடைகளில் நடக்கத் தொடங்கி பயிற்சி செய்யலாம். ஆனால் அது இருபுறமும் சம அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

66
பயன்கள்:

ஒரு பையில் எடைகளை வைத்து நடப்பது ஆரோக்கிய நன்மைகளை தரும். இதனால் உடலில் செயல்பாட்டு வேகம் அதிகமாக்ம். தசைகள் வலிமையடையும். இதய செயல்பாட்டை மேம்படுத்தும். எடையை குறைக்க உதவும். ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சியாக இருப்பதால்  கால்கள், மையப்பகுதிக்கும் (core) நல்ல வலு கொடுக்கும்.  

பின்குறிப்பு: 

இந்த பயிற்சியை செய்ய தொடங்கும் முன்பாக நீங்கள் சுமக்க வேண்டிய எடை குறித்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஒரு ஆலோசனை பெறுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories