குழந்தைகளின் நெஞ்சு சளி ஒருநாளில் கரைய சூப்பர் வீட்டு வைத்தியம்!!

Published : Feb 08, 2025, 12:44 PM IST

Chest Mucus Treatment For kids : குழந்தைகளின் மார்பில் உள்ள சளியை போக்க சில வீட்டு வைத்திங்கள் குறித்து இங்கு காணலாம்.

PREV
15
குழந்தைகளின் நெஞ்சு சளி ஒருநாளில் கரைய சூப்பர் வீட்டு வைத்தியம்!!
குழந்தைகளின் நெஞ்சு சளி ஒருநாளில் கரைய சூப்பர் வீட்டு வைத்தியம்!!

மாறிவரும் வானிலை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகளுக்கு மார்பில். இது தவிர இருமல் தொண்டை கரகரப்பு போன்ற பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் கம்மியாகவே இருக்கும். மார்பு சளி காரணமாக குழந்தைகளால் சரியாக சுவாசிக்கவும், பேசவும் முடியாமல் போகும். 

25
குழந்தைகளின் நெஞ்சு சளியை போக்க

குழந்தைகளுக்கு பிடித்திருக்கும் மார்பு சளியைப் போக்க எத்தனை மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் குறையவே குறையாது. அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் நெஞ்சு சளி காரணமாக அடிக்கடி இருமல் வந்து அவர்களை தொந்தரவு படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுவாசிப்பதிலும் திறமையை ஏற்படுத்தும். இதனால் அவர்களால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் போகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குழந்தைகளுக்கு இருக்கும் நெஞ்சு சளியை நிரந்தரமாக நீக்க முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

35
மிளகு கசாயம் / பால் :

5-7 மிளகுகளை நன்றாக பொடியாக்கி அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுங்கள். அதுபோல பாலில் மிளகுத்தூளை கலந்து குழந்தைகளுக்கு கொடுங்கள். மிளகில் இருக்கும் காரமான பண்பு சளியை மெல்லிய தாக்கி வெளியேற்றிவிடும்.

தேங்காய் எண்ணெய், கற்பூரம்:

குழந்தைகளுக்கு மார்பு சளி அதிகமாக இருந்தால் அவர்களால் இரவு சரியாக தூங்க முடியாது. இதனுடன் இருமலும் தொடர்ந்து இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சிறிதளவு சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை பொடியாக்கி, அதை குழந்தைகளின் நெஞ்சில் தடவி விடுங்கள். இப்படி செய்து வருவதன் மூலம் இருமல் குறையும், உங்கள் குழந்தையும் இரவு நிம்மதியாக தூங்குவார்கள்.

இதையும் படிங்க:   பெற்றோரே! குளிர்காலத்துல குழந்தைங்களை நீரேற்றமாக  வைத்திருக்கும் சூப்பர் டிப்ஸ்!!

45
கற்பூரவள்ளி கசாயம்:

கற்பூரவள்ளி சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் குழந்தை சளி மற்றும் இருமலால் ரொம்பவே அவதிப்படுகிறார்கள் என்றால், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு கற்பூரவள்ளி இலை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுக்கவும்.

தூதுவாளை கசாயம்:

நெஞ்சு சளியால் அவதிப்படுகிறார்கள் என்றால், ஒரு கிளாஸ் தண்ணீரில் தூதுவளை இலையை போட்டு நன்றாக காய்ச்சி குடிக்க கொடுங்கள். அதன் கசப்பு தன்மை உங்கள் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால், சிறிதளவு தேன் கலந்து கொடுக்கலாம்.

இதையும் படிங்க:  குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு  இந்த ட்ரிங்க்ஸ் நல்லது; ஆனா இந்த '4' மட்டும் கொடுக்காதீங்க!!

55
எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு:

எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் சம அளவாக எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு தேன் கலந்து உங்களது குழந்தைக்கு குடிக்க கொடுங்கள் இதனால் நெஞ்சு சளி கொஞ்சம் கொஞ்சமாக கரையும்.

மஞ்சள் தூள்:

நெஞ்சு சளியால் அவதிப்படும் உங்கள் குழந்தைக்கு சூடான பாலில் சிறிதளவு பனங்கற்களும் மற்றும் மஞ்சள் தூள் கலந்து இரவு தூங்கும் முன் குடிக்க கொடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories