நீரிழிவு நோய் இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடு, உணவுப் பழக்கங்களுடன் தொடர்புள்ளது. நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிடால் இரத்த குளுக்கோஸ் அளவு உயர்வதைவிட அதிகமான விளைவுகள் ஏற்படும். அதில் மோசமான பாதிப்புதான் கண் பார்வை இழப்பு என்பதாகும்.
இந்த நீரிழிவு விழித்திரை நோய் வேலை செய்யும் இளம்வயதினரிடையே அதிகரித்துவருகிறது. நீரிழிவு நோய் கண்களுக்கு நீண்டகால பாதிப்பை உண்டாக்குவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சைகள் மேம்படுள்ளன. ஆனாலும் நீரிழிவு நோய் பார்வை குறைபாடுடன் தொடர்புடையது குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.
25
தரவுகள்
நேபாள மருத்துவ சங்க இதழில் வெளியான ஓர் ஆய்வில், 3ஆம் நிலை கண் மருத்துவமனைக்குச் சென்ற வகை -2 நீரிழிவு நோயாளிகள் குறித்து சில தரவுகள் வெளியிடப்பட்டன. அதில், அந்நோயாளிகளிடையே பார்வைக் குறைபாடு ஆய்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 449 நீரிழிவு நோயாளிகளில் 3.79% பேர் பார்வையற்றவர்களாக இருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு கடுமையான நீரிழிவு ரெட்டினோபதி, மாகுலர் எடிமா ஆகிய நோய்கள் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
35
அறிகுறிகள்
நீரிழிவு விழித்திரை நோய் தொடக்க காலத்தில் அறிகுறிகள் இல்லாமல் வெளிப்படுகிறது. பின்னர் காட்சி மாற்றங்கள், மங்கலான காட்சிகள் அல்லது பார்க்கும்போது சிறிய கரும்புள்ளிகள் தெரிவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
ஒரு கண் இன்னொரு கண்ணை விட பலவீனமாகத் தெரியும். இரவில் கண் பார்வை மோசமாக மாறும். இந்த நிலை இன்னும் மோசமாகும்போது பார்வைக்கு காரணமான ரெட்டினால் என்ற விழித்திரை மையமான மாகுலாவில் திரவம் குவிதல் அல்லது அலை அலையான பார்வையை ஏற்படுத்தும். இதனை நீரிழிவு மாகுலர் எடிமா (DME) என்கிறார்கள். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் சரிசெய்ய முடியாத மைய பார்வை இழப்பு வரும். படித்தல், வாகனம் ஓட்டுதல், முகங்களை வித்தியாசப்படுத்தி பார்ப்பதே சிரமமாகும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் அடிக்கடி ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தலாம். இதை தற்காலிக பிரச்சனை என அலட்சியப்படுத்தக் கூடாது. இந்த அறிகுறிகள் இல்லாவிட்டாலும் நீரழிவு நோயாளிகள் வழக்கமான கண் பரிசோதனைகளை செய்வது அவசியம். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கண் நிபுணர்களிடம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
55
உணவு முறை
உணவில் சிறுமாற்றம் வேண்டும். கார்போஹைட்ரேட்டை குறைத்து கீரைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ள சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். இது கண்களில் விழித்திரை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. நடைபயிற்சி, மிதமான உடற்பயிற்சிகள் இரத்த ஓட்டம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். மது அருந்துதல், புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் யோகா, தியானம் போன்றவற்றில் ஏதேனும் செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.