இன்றைய காலக்கட்டத்தில் சிலர் பல ஆயிரங்களை பியூட்டி பார்லரில் கொடுத்து சருமத்தினை பராமரிக்க நினைக்கின்றனர். ஆனால் சில பழங்களை உண்பதன் மூலம் நம் சருமத்தை பாதுகாக்க முடியும். சின்ன சின்ன இயற்கை குறிப்புகள் மூலம் முகத்தை பராமரிக்க முடியும். அந்த வகையில் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் தக்காளி முகத்திற்கு பல நன்மைகளை செய்யக்கூடியது. தினமும் தக்காளியை முகத்தில் பூசி வந்தால் சருமம் மென்மையாகும். முகத்தில் உள்ள துளைகள் மறையும்.
தகதக சருமத்திற்கு தக்காளி!
நன்கு கனிந்த தக்காளி தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் தான் அதிமான அளவில் சாறு கிடைக்கும். இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு பிழிந்து அதனுடன் 3 தேக்கரண்டி மோர் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் பூசி பதமாக மசாஜ் செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு கழுவினால் முகத்தில் மாற்றத்தை உணருவீர்கள்.
வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது தோலில் காணப்படும் சுருக்கங்களை நீக்குகிறது. இதனால் முகம் இளமையாக தெரியும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி, பி1, சி, ஈ ஆகியவை சருமத்திற்கு ஏற்றது.
ஜொலிக்கும் முகத்திற்கு வாழைப்பழம்!
நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். அதுதான் மசிக்க ஏதுவாக இருக்கும். அதனை முகம், கழுத்தில் பூசி கொள்ளுங்கள். முகப்பரு, கரும்புள்ளிகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மசித்த வாழைப்பழத்தில் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ள வேண்டும். நன்கு சருமம் இந்த பேஸ் பேக்கை அனுபவித்த15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.