Mint water: ஜொலிக்கும் சருமம்! அதிகாலையில் புதினா வாட்டர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

First Published | Jan 2, 2023, 5:35 PM IST

உடல் எடையை கட்டுக்குள் வைப்பது முதல் சருமத்தை பளபளக்க செய்வது வரை புதினா தண்ணீரின் (mint water) மகிமை அளப்பரியது. 

பருவகாலங்களுக்கு ஏற்றவாறு உணவை எடுத்து கொள்ளும்போது செரிமான பிரச்சனைளுக்கு தீர்வு காண முடியும். குளிர்காலத்தை பொருத்தவரை செரிமான பிரச்சனைகள் இயல்புதான். போதிய வெப்பம் இல்லாமல் செரிமானம் மந்தமாகலாம். இந்தப் பிரச்னைகளைக் குறைக்க பல வழிகள் உள்ளன. ஒரு டம்ளர் புதினா தண்ணீரை அருந்தினால் உடனடியாக செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடமுடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான். 

புதினா இலைகளில் பல சத்துகள் காணப்படுகின்றன. தினமும் எழுந்ததுமே செல்போனை எடுக்காமல் ஒரு டம்ளர் புதினா தண்ணீரை அருந்துவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெல்ல முடியும். இதனால் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். நம் உணவில் உள்ள சத்துக்களை கிரகித்து கொள்ள இந்த தண்ணீர் உதவியாக இருக்கும். 

மெந்தா வகையை சேர்ந்த புதினாவில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு, புரோட்டீன், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகிறது. பொட்டாசியம் இதய நோய்களில் இருந்து காக்கும். நமது உடல் வறண்டு போகாமல் நீரேற்றமாக இருக்க புதினா தண்ணீர் உதவுகிறது. 

இதையும் படிங்க; பீர் தானேனு அடிக்கடி குடிக்காதீங்க! அதுல எவ்ளோ ஆல்கஹால் இருக்கு தெரியுமா?

Latest Videos


புதினாவில் சத்துக்களை உறிஞ்சும் சக்தி இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை முன்னேற்றம் காண செய்யும். வளர்சிதை மாற்றம் சீராக உயருவதால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். 

அசிடிட்டியை குறைக்கும்! 

அசிடிட்டி, வாயு பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்தால் புதினா தண்ணீர் உங்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். இதை அருந்திய சில நிமிடங்களில் நல்ல மாற்றத்தை உணருவீர்கள். செரிமான கோளாறு, அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகிய பிரச்சினைகளை மட்டுமின்றி வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைத்து துர்நாற்றத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது. 

காய்ச்சலை விரட்டும்! 

புதினாவில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் சளி, காய்ச்சலை குறைக்க உதவும். இதன் மூலம் ஏற்படும் வலி, அசௌகரியத்தைக் குறைக்கவும் புதினா உதவும். 

சருமத்தை ஜொலிக்க வைக்கும்! 

தோல் நோய்களை குறைக்கும் வல்லமை புதினா தண்ணீருக்கு உள்ளது. உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, மென்மையாகவும் அழகாகவும் மாற்றுகிறது. எப்போதும் இளமையாக வைத்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளதால் வயதாகும் செயல்முறை தாமதமாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. நம் உடலில் உள்ள நச்சுகளை கூட புதினா வெளியேற்றும்.

புதினா தண்ணீர் செய்வது எப்படி? 

நன்கு கழுவிய புதினா இலைகளை எடுத்து கொள்ளுங்கள். ஒரு டம்ளர் தண்ணீரில் அந்த இலைகளை போட்டு இரவு முழுவதும் சாறு இறங்கவிடுங்கள். உங்களுக்கு உடல் குளிர்ச்சி தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இந்த தண்ணீரை காலையில் அருந்தினால் மேற்கண்ட எல்லா பலன்களும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த தண்ணீரை எலுமிச்சை சேர்க்காமல் சூடு செய்து பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு புதினா டீயாகவும் அருந்தலாம். 

click me!