பீர் தானேனு அடிக்கடி குடிக்காதீங்க! அதுல எவ்ளோ ஆல்கஹால் இருக்கு தெரியுமா?

First Published Jan 2, 2023, 4:16 PM IST

இந்திய சந்தைகளில் விற்கும் பீர்களில் அதிக அளவில் ஆல்கஹால் கலந்துள்ள பீர் வகைகளை குறித்து இங்கு காணலாம். 

தற்போதைய தலைமுறையில் மது அருந்தும் பழக்கம் அதிகமாகவுள்ளது. பார்ட்டி, டீரிட் என பல பெயரில் சோசியல் ட்ரிங்கர்ஸ் பீர் அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில எடை அதிகரிக்க அருந்தி வருகின்றனர். கசப்பான சுவை கொண்ட இந்த பானம் பலரால் அருந்தப்படுகிறது. விஸ்கி, ரம் போன்றவைதான் மது வகையை சேர்ர்தவை என்றும் பீர் அப்படியில்லை எனும் கருத்தும் நிலவி வருகிறது. அதற்கு இதில் உள்ள ஆல்கஹால் தன்மை குறைவு என்பதுதான் காரணம்.

இதையும் படிங்க; மாரடைப்பு வராது! வறுத்த கடலையும் வெல்லமும் தரும் நன்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க!

ஆல்கஹால் தன்மை என்பது மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவை பொருத்து வரையறுக்கப்படுகிறது. 100மிலிக்கு எவ்வளவு மிலி எத்தனால் உள்ளதோ அதுவே மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு. எப்படி பீர் அருந்துவதை அதிக கேடாகிறது? நாம் மற்ற மதுவகைகளை அருந்தும்போது தண்ணீர் கலந்தே அருந்துகிறோம். உதாரணமாக விஸ்கி எடுத்து கொள்ளும் நபர் ஒரு பெக் (30மிலி) அதனுடன் 200 மிலி நீர் சேர்க்கிறார் எனில், அவர் 230மிலி அருந்துகிறார். அதில் 30 மிலியில் 10 கி ஆல்கஹால் இருக்கும். ஆனால் பீர் அருந்தும்போது 6 விழுக்காடு ஆல்கஹால் இருக்கிறது எனக் கொண்டால், 250 மிலியில் 15கி ஆல்கஹால் உடலுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஈஎம்ஆர் (EMR) தகவல்களின்படி, இந்தியாவில் சந்தையில் பீர் விற்பனையால் 371 பில்லியன் மதிப்பு விற்பனையாகிவருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தத் தொழில் சுமார் 662 பில்லியன் ரூபாயாக மதிப்பு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால் அதிகமுள்ள பீர் வகைகளை இங்கு காணலாம். 

ஓல்ட் மாங்க் 

இந்த பீரில் 5 சதவீதம் முதல் 42.5 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. இது 1954இல் ஆரம்பிக்கப்பட்டது. 1990களில் மது அருந்த தொடங்கியவர்கள் ஓல்ட் மாங்க் குறித்து பல விஷயங்களை கூறுவர். இதற்கென எந்த விளம்பரமும் இல்லையென்றாலும் பலரும் இதனை தெரிந்து கொள்ள அதுவும் ஒரு காரணம். ஓல்ட் மாங்க் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானமாக இருந்து வருகிறது. 

காட்பாதர் 

இந்த பீர் வகை வட இந்தியாவில் பிரபலம். ஸ்மூத் ட்ரிங்க் ஆக இது இருப்பதால் அதிகம் விற்பனையாகிறது. சுமாராக 8 சதவீதம் இதில் ஆல்கஹால் உள்ளது. இதனை டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் இதற்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

ஹேவர்ட்ஸ் 5000 

ஹேவர்ட்ஸ் 5000 எனும் பீர் சுமார் 7 சதவீதம் ஆல்கஹாலுடன் ஸ்ட்ராங்க் பீராக இந்தியாவில் வலம் வருகிறது. இதனுடைய சுவை கொஞ்சம் கசப்பானது. 

கிங்ஃபிஷர் ரெட் 

இந்த பிராண்ட் இந்தியா முழுக்க பிரபலமானது. இது எல்லா பருவங்களிலும் நல்ல விற்பனை ஆகும் பானம். இதில் 8 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. 

தண்டர்போல்ட்

மோர்சன் (Morson Cools) நிறுவனத்திற்குச் சொந்தமானது, தண்டர்போல்ட். இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பீர்களில் முக்கியமானது. இந்த பீரில் சுமார் 5 முதல் 8 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. மது அருந்துதல் உடலுக்கு கேடு என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். அதில் பீர் ஒன்றும் விதிவிலக்கல்ல. மக்களே கவனம்.

click me!