நட்சத்திர சோம்பில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் தைமால் (thymol) , டெர்பினோல் (terpineol), அனீத்தோல் (anethole) ஆகிவை உள்ளது. இது இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இந்த சோம்பு செரிமானத்தை மேம்படுத்துகிறது. குமட்டலைக் குறைக்கவும் உதவுகிறது. உடலில் ஆங்காங்கே ஏற்படும் பிடிப்பையும் குறைக்கும்.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி ஆகியவை மிகுந்து காணப்படுகிறது. இது விரைவில் வயாதாகுவதை தடுத்து இளமையான தோற்றத்தை தருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.