உடலை பேணும் அன்னாசி
அன்னாசி பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்கள், என்சைம்கள் உள்ளன. இவை நம் உடலில் எளிதில் கிரகித்துக் கொள்ளப்படும். இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். அதனால் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகவே சுகாதார நிபுணர்கள் அன்னாசியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.
இதுதான் அன்னாசி டயட்!
முதலாம் நாளில் நீரும் அன்னாசியும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் நாளில் இரண்டு கப் வேகவைத்த மீனும், அன்னாசியும் உண்ணுங்கள். ஒரு கப் மதியம், மற்றொரு கப் இரவில் உண்ணுங்கள். மூன்றாம் நாளில் நீரும் அன்னாசியும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாளில் விருப்ப உணவை உண்ணுங்கள். அதில் துரித உணவுகளோ, எண்ணெய்யில் பொரித்த உணவுகளோ இருக்க வேண்டாம்.