இந்த தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி...மொறு மொறு தட்டை முறுக்கு ரொம்ப டேஸ்டியா, இப்படி ஒருமுறை செய்து அசத்துங்கள்..!

First Published Oct 23, 2022, 10:59 AM IST

Thattai murukku recip in Tamil; இந்த தீபாவளிக்கு நல்ல சுவையான தட்டை ரொம்பவும் எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது?  என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தீபாவளி வந்துவிட்டாலே முறுக்கு, தட்டை, சீடை, குலோப் ஜாமுன் போன்ற பலகாரங்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், இந்த தீபாவளிக்கு நல்ல சுவையான தட்டை ரொம்பவும் எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது?  என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
 

தட்டை அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப்பருப்பு, மிளகாய் தூள், மற்றும் எள் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இவற்றை சரியான முறையில் கலந்து முறுமுறுப்பாக எண்ணெயில் பொரித்து எடுத்தால் தட்டை தயார். சுவையான தட்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

செய்முறை விளக்கம்: 

கடலை பருப்பு 30  நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். கருவேப்பிலை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், மற்றும் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க...தீபாவளிக்கு ரவையை வைத்து குலாப் ஜாமுன் ரெசிபி, இப்படி செய்து அசத்துங்கள்! கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம்!

இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பை ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காம்பு நீக்கிய பத்து காய்ந்த மிளகாயில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள காய்ந்த மிளகாய் சேர்த்து, இதனுடன் 20 பூண்டு பற்களை சேர்த்து கொஞ்சம் நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.


இரண்டு டம்ளர் அளவிற்கு நீங்கள் எடுத்து வைத்துள்ள உளுந்து கலந்த அரிசி மாவுடன் இந்த சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லித்தழைகளை சேர்க்க வேண்டும். 

பின்னர் நீங்கள் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு கைகளால் கலந்து விடுங்கள். அதனுடன் 2 தேக்கரண்டி சூடான எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பிசைந்த மாவை கொள்ளவும்.. பின்னர் ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி,  தட்டையாக தட்டி கொள்ளவும். அவ்வளவுதான், சூப்பரான சுவையான தட்டை ரெசிபி ரெடி!

மேலும் படிக்க...தீபாவளிக்கு ரவையை வைத்து குலாப் ஜாமுன் ரெசிபி, இப்படி செய்து அசத்துங்கள்! கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம்!

click me!