இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட ஆரோக்கியமாக கீரை வடை ரெசிபி..! இப்படி ஒருமுறை செய்து அசத்துங்கள்..!

First Published Oct 18, 2022, 11:57 AM IST

How to make keerai vadai in tamil: வெறும் 1 கப் பொட்டுக்கடலை இருந்தா போதும் அருமையான கீரை வடை ரெசிபியை, சுலபமான முறையில் இந்த தீபாவளிக்கு செய்து அசத்தலாம். 

தீபாவளி நாட்கள் துவங்கிவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. கூடவே இந்த நாட்களில் ஒரு வாரம் முழுவதும் விதமான பலகாரங்கள் வீட்டில் செய்யப்படும். ஆனால், இப்பொழுது எல்லாம் வீட்டில் யாரும் பலகாரம் செய்யாமல், கடைகளில் ஆர்டர் செய்து தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். 

மேலும் படிக்க...தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி..வெறும் 5 நிமிடம் இருந்தால் போதும்..டேஸ்டியான கார அப்பம் இப்படி செய்து அசத்தலாம்.!


இவை, உடல் ஆரோக்கியத்திற்கு  தீங்கு விளைவிக்கும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆரோக்கியமான முறையில்  ருசியான் தீபாவளி பலகாரம் செய்யலாம். விதவிதமான கீரை வடைகள் நாம் சாப்பிட்டு பார்த்திருப்போம். ஆனால், தீபாவளி நாட்களில், பொட்டுக்கடலை கொண்டு இது போல கீரை வடை ரெசிபியில் ஒன்றை சட்டுன்னு பத்து நிமிஷத்தில் எப்படி செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை – ஒரு கப்

வெங்காயம் – 2

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

முளைக்கீரை - தலா ஒரு கப்

பெரிய வெங்காயம் – நறுக்கியது ஒன்று

பச்சை மிளகாய் – 3

எண்ணெய் – தேவையான அளவு 

பூண்டு – ஐந்து பல்

இஞ்சி – ஐந்து துண்டு

சோம்பு – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி, கருவேப்பிலை– ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கப் அளவிற்கு பொட்டு கடலை எடுத்து 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

பின்னர், கீரை, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

பின்னர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை நறுக்கி சேருங்கள்.தேவையான அளவு உப்பு  சேர்க்க வேண்டும். அதனுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு வருமாறு கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளுங்கள். 

கெட்டியாக மாவை நன்கு கலந்து விட்ட பின்பு சிறு சிறு வடைகளாக தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில்கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். 


மேலும் படிக்க...தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி..வெறும் 5 நிமிடம் இருந்தால் போதும்..டேஸ்டியான கார அப்பம் இப்படி செய்து அசத்தலாம்.!

click me!