Vaginal itching: பெண்ணுறுப்பில் அரிப்பு நாற்றம் எடுக்கிறதா? இதை செய்ய மறக்காதீங்க!

கருப்பை வாயுடன் இணைந்து காணப்படும் மென்மையான உறுப்புதான் பெண்ணுறுப்பு (vagina). இதை கவனமாக சுத்தம் செய்யாவிட்டால் தொற்றும், துர்நாற்றமும் ஏற்படும். 

இந்தியாவில் பாலியல் கல்வியின் நிலை ரொம்ப மோசமாகவுள்ளது. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இனப்பெருக்க உறுப்பின் சுத்தம் குறித்த அறியாமை அதிகமுள்ளது. சிலருக்கு அந்தரங்க உறுப்பில் தொற்றும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான வழியில் பெண்ணுறுப்பை பராமரித்தால் அதில் வரும் தொற்று குணமாகும். ஆரம்பத்தில் வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகளில் தொற்று வெளிப்படும். இதனை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் கிருமியும், பூஞ்சையும் உருவாகி அந்தரங்க உறுப்பே மோசமான நிலைக்கு சென்றுவிடும். இதை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும். 

இதையும் படிங்க; செக்ஸ் முதல் ஸ்லீப் வரை.. புத்தாண்டில் ஹேப்பி ஹார்மோன்களை தூண்டும் வழிகள்!

ஆடைகள் கவனம்

பருத்தி ஆடைகளை மட்டுமே அணிவதால் சருமத்திற்கு போதுமான காற்றோட்டம் கிடைக்கும். இதனால் வியர்க்கும் அபாயம் இல்லை. வியர்வை உறிஞ்சும் ஆடைகளை அணிவதால் ஈரப்பதம் அதிகரிக்காது.  மேலும், மாதவிடாய் காலத்தில் நீங்கள் அணியும் ஆடைகளை மற்ற நேரங்களில் நீங்கள் அணியும் ஆடைகளிலிருந்து பிரித்து வைக்கவும். தேவைக்கேற்ப உள்ளாடைகளை மாற்ற வேண்டும். காற்றுபுகாத உள்ளாடைகளை பயப்படுத்தவேண்டாம். இவை வெப்பத்தை அதிகரித்து தொற்றை உண்டாக்கும். 


வெஜினாவை ஈரமாக வைத்திருங்கள்!

பெண்ணுறுப்பு பகுதியை தினமும் ஈரப்பதமாக வைப்பது அவசியம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அது மென்மையான உறுப்பு என்பதால் வறட்சியைத் தவிர்க்க தேங்காய் எண்ணெய் அல்லது வாசனை இல்லாத மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்துங்கள். வெளிப்புறமாக பூசினால் போதும். 

நல்ல பாக்டீரியாவை ஆதரிக்கலாம்! 

புரோபயாடிக் உணவுகள், பூண்டு, சிட்ரஸ் பழங்கள், அதிக நார்ச்சத்துள்ள உணவுகள், கிரான்பெர்ரிகளை அதிகம் உண்ணுங்கள். இந்த உணவுகள் தொற்றுநோய்கள், அரிப்புகளைத் தடுக்கிறது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு எதிராக போராடுகின்றன. 

சுத்தம் செய்யும் வழிமுறை 

நாள்தோறும் வெஜினாவை சுத்தம் செய்வது கட்டாயம். வெதுவெதுப்பான நீரினால் பெண்ணுறுப்பை கழுவினாலே போதும்.  உள்ளாடைகளை ஈரம் என்று அணிவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

மாதவிடாய் நேரத்தில் கவனம்! 

மாதவிடாய் நேரத்தில் சுத்தத்தில் கூடுதல் கவனம் தேவை. மென்சுரல் கப்பை செருகுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவவும்.  ஒவ்வொரு 4 முதல் 5 மணி நேரத்திற்கும் நாப்கினை மாற்றவேண்டும். ஒவ்வொரு முறை குளியலறைக்கு செல்லும் போதும் வெஜினாவை சுத்தம் செய்வதால் அரிப்பு ஏற்படாமல் இருக்கும். துர்நாற்றமும் வீசாமல் இருக்கும். 

Latest Videos

click me!